நான் எதார்த்தம் அல்ல
நாளைய சரித்திரம் அல்ல
நேற்றைய முடிவு
இன்றைய தொடக்கம்.
இன்றைய தொடக்கத்தில்
இதுவரை பயணிக்கிறேன்
எதுவரை நிறுத்தம்
அதுவரை பயணம் .
என் சாலையில்
இயற்கை சோலையில்
சில வெப்பம்
பல தென்றல் !
வழிப்போக்கர்கள்
வழியறியாது திணறுகிறார்கள்
பார்வைக்கோளாறு அல்ல
பார்க்காத பயணம் ஆதலால் !
உருவமுண்டு -உயிரில்லை
உணர்ச்சிக்கு தோழன்,
உணரவேண்டிய உடல்
ஊனமில்லா நிழல் !
நிஜத்தை மிரட்டும்
நிமிடத்தை விரட்டும் .
நிலைக்காது நீடிக்காது
நிழல் என்பது நீதிக்காகாது.
நாமும் அப்படியே
நிஜமாய் வாழ்ந்து
நிலை தடுமாறினால்
கடைசியில் நிழல் வாழ்க்கை .
நாம் சம்பாரிக்கும் செல்வங்களே !
"பா மகன்"