வியாழன், 23 செப்டம்பர், 2021

அவனுக்கு நான் மட்டுமே ரசிகை

எத்தனை  அழகு 
சாதனப் பொருட்கள்..
எத்தனை அலங்காரங்கள்
அம்சமாக அமைந்தாலும்
அவன்...
அருகில் பார்த்து ரசிக்க
நான் ..வெட்கபடுவதே
எனக்கு மிகப்பெரிய
அழகு.

கண்ணாடி காட்டாத
அழகைக்கூட...அவன்
முன்னாடி என்னை
காட்டுகிற அழகுக்கு
என்ன ஈடு இணை
இருக்கப்போகுது.
இந்த
இல்லாள் என்பது 
அவனின் இதயமல்லவா..
இல்லாத இன்பம்
அவனின்றி இல்லாமல் இல்லை.!
Published from Blogger Prime Android App

பேசிவிட்டேன் அவளை பேசவிட்டு

தினமும் தான்..
அந்த ஒரு சில நிமிடங்களில்
நிறைந்திருக்கும் ஆவல்கள்
நிறைவேறாத தருணங்களில்.

அப்படியொரு ஆர்ப்பரிப்பு
அது இது எது என்ற விசாரிப்பு,
மகிழ்வின் உச்சத்தில் நடுக்கம்
கேட்டுவிட்டோம் சொல்லிவிட்டோம் பூரிப்பும்.

ஆசைகள் பரிமாறின சத்தமின்றி
பேராசைகள் முத்தமாகின கூச்சமின்றி
செவிகளின் வாயிலாக ..நிறைந்தன
அன்பும் ..பண்பும்...பாசமும்...காதலும்.

பணம் செலவானது மனம் வரவானது
நேரம் நெருங்க...தூரமானோம்
வேறேதும் செய்தியை வினவிட..
விழிகள் நான்கும் பேசிக்கொண்டது.

விடைபெற்று வெளியே வந்தேன்.
தொலைதூரம் என்பது மாயை..
தொலைபேசி தந்துபோனது சுமையே
திருப்தி படுத்தியது பேசிவிட்டேன்.

Published from Blogger Prime Android App

ஞாயிறு, 20 ஜூன், 2021

தந்தை...

 கோபத்திலே குணமிருக்கும்

ஆத்திரத்தில் அன்பிருக்கும்

எரிச்சலில் ஏக்கமிருக்கும்

கடுகடுப்பில் பாசமிருக்கும்.


கண்டிப்பில் கவணிப்பிருக்கும்

தண்டிப்பில் பிரியமிருக்கும்

அதட்டலில் போலியிருக்கும்

மிரட்டலில் செல்லமிருக்கும்


அழைப்பதில் பதற்றமிருக்கும்

அப்பா என்றால் பயமிருக்கும்

அப்பாக்களுக்கு பிள்ளைகளே

அனைத்துலக இருக்கும்.


வெளிப்படையாய் பார்த்தால்

பலாப்பழம் போன்றவர்.

உள்ளமோ பலாப்பழ சுளைப்போன்று

தித்திப்பாய் இனிப்பவர்.


அப்பா...

சொல்லும்போதே

ஒரு கெத்து வரும்.

அது மட்டுமே சொந்த வரும்!


-மு.யாகூப் அலி்