பூமி சூடு பட்டு
பாதம் பொசுங்குவ தில்லை.
வியற்வையின் உப்பு
கன்னங்களில் உறைவதில்லை.
முத்தங்கள் தாக்கியதில்
உதடுகள் மரிப்பதில்லை.
உழைப்பில் பாடுபட்டு
ஊதியங்கள் தவறுவதில்லை.
காதலில் தியாகம் செய்ததால்
காலத்தை ஒதுக்கியோர் யாருமில்லை.
அவசரத்தில் உதவியவர்கள்
அதை திருப்பி கேட்டதில்லை.
ஒவ்வொரு நிமிடமும்
வினாடிகளை வென்றது.
ஒவ்வொரு நேரமும்
ஒவ்வொரு நிமிடத்தை வென்றது.
ஒவ்வொரு நாட்களும்
ஒவ்வொரு நேரத்தையும் வென்றது.
ஒவ்வொரு வாரமும்
ஒவ்வொரு நாட்களை கடந்தது.
ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு வாரத்தை வென்றது.
ஒவ்வொரு வருடமும்
ஒவ்வொரு மாதங்களை வென்றது.
ஒரு வருடத்திற்குள்
ஒரு சிசு உலகை பார்க்கிறது.
வெல்ல முடிந்தால்...
உலகமும் ...கருவறை
அதை வெல்ல முடியாமல்....
வாழ்ந்தவர்கள் பலர். கல்லறையில்....
நாமும் ....அதற்காகவே
இதற்காக ஜனனமும்-மரணமும்.
வாழ்வோம் ...வளமாய்....
இறை அருளால்.
-மு.யாகூப் அலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக