செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

கார்கோ பிக் அப்-பார்சல் -6

கார்கோ பிக் அப் -பார்சல் 6 
-----------------------------------------------
தினமொரு முகவரியில்
என் பிழைப்பு ஆனதடி,
மனமொரு முகம்தேடி
ரணமாகி போகுமடி.

கணப்பொழுது வாகனச்சூடு
கொதித்தே வரும் சிறுநீரும்,
வெப்பச்சூட்டில் நாலுகாசு
வியற்வை மழையில் தேகமடி.

தாகமெடுக்கும் நீருமிருக்கும்
அருந்த நேரமிருக்காது,
பசியெடுக்கும்  உணவுமிருக்கும்

உண்ண வாய்ப்பு கிடைக்காது.
எனக்காக எங்கோ நீ
பிறந்து விட்டாய்,
அதற்காக ..ஒத்திகையை
கவிதையில் நடத்துகிறேன்.

                    ஷாம்...மொபைலில் டைப் அடிக்கும் போது சோமு கவனித்து விட்டான்..அண்ணே என்னா....!வரிகள் செமையா இருக்கு..யாருக்குண்ணே என்னா ...இப்படி எழுதி இருக்குறீங்க..?

  எல்லாம் எனக்காக பிறந்தவளுக்கு ..நான். கவிதை எழுதினா எப்படி இருக்கும் என்று சும்மா எழுதி பார்த்தேன்..என்றான் ஷாம்...

ஏன் அண்ணே நீங்க யாரையாவது
காதலித்தது உண்டா...அதெல்லாம் இல்லடா..அப்படி காதலித்திருந்தா
நான் ஏன் இந்த மாதிரி எழுத போகிறேன்..இப்ப நான் எழுதி இருப்பது

என் எதிர்கால உயிருக்கு...ஓர் சரிதை.
சரிசரி...வாங்க அந்த 45 தினார் பார்ட்டிக்கு போன் பண்ணுவோம்...என்றான் சோமு..

மறுபடியும் அந்த நண்பருக்கு தொடர்பு கொள்வதற்கான போன் அடித்தான்..சோமு

அலோ ..யாரு.....
நான்...தான் கொஞ்ச முன்னாடி உங்க நண்பருடைய பார்சல் எடுக்க வந்த ஆட்கள்..

ஆமாம்....சொல்லுங்க...என்ன விசயம்..
இல்லை அவர் பார்சல் அனுப்புனதற்கு
காசு வாங்காமலே போய்விட்டோம்...
பிறகு அவருக்கு அடித்து கோட்கையில் அந்த காசு உங்களிடம் தான் கொடுத்தாராம்..என்றான் சோமு..
ஆமா...அத நானும் மறந்தே விட்டேன்..இருங்க மணி பர்ச ரூம்ல வச்சிறுக்கேன்...இதோ எடுத்துட்டு வருகிறேன்...என்று உள்ளே போனார் அந்த நணபர்...அப்போது காத்திருந்த தருணம்..
அந்த வீட்டில் வேலை செய்யும்...பெண்மனி
வெளியே குப்பையை போட வந்ததை
சோமு கவனித்து விட்டான்..
அந்த பெண்ணும் இவனை கவனித்து...
சோமுவை நெறுங்கியபடி அருகில் வந்து
நீங்க தமிழா ஆமாம்...நானும் தமிழ் தான் இது உங்க கார்கோ வண்டியா ...ஆமாம்....
கிலோவுக்கு எவ்வளவு..ஏர் கார்கோ எத்தனை..நாளில் ஸீ கார்கோ எத்தனை..நாளில் கிடைக்கும்..பெண்மனி 
கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிவிட்டு..
தன் கம்பெனி கார்டில். அவன் ஆர்டருக்காக வைத்திருக்கும் மொபைல் நம்பரையும் எழுதி கொடுத்தான்...பார்சல் ரெடி பண்ணி
போன் பண்ணுங்க...வேறேதும் சந்தேகம் இருந்தால்..இதுதான் என் நம்பர்..தொடர்பு கொள்ளுங்கள்..சரியா என்று பேசி முடித்தவுடன்.. மீண்டும் சோமுவின் போன் ரிங்டோன்..ஊ சொல்றியா..மாமா ஊஊ சொல்றியா மாமா...ரிங்டோனை கேட்டவுடனே..அருகில் இருந்த அந்த பெண்..சோமுவை பார்த்து நாணத்துடன்
புன்னகைத்ததை கவனித்துவிட்டான்..
பிறகு  போனை எடுத்து பார்த்த போது..
ஷாம்...அம்மாவின் நம்பர்...உடனே எடுத்து பேசினான்....அலோ...என்றவனின் முகம்
பதறியது...ஏன் ஏம்மா அழகுறீங்க..என்ன விசயம்..விசயத்தை சொல்லுங்க...என்றான்..இருந்தாலும் அந்த அம்மாவின் அழுகுரல் ஓயவில்லை..
ஏன் இந்த அழுகுரல்...என்ற காரணத்தோடு..
மீண்டும் கேட்டான் அப்படி அழக் காரணம் என்னவா  இருக்கும்..நாளை பார்ப்போம்..
அதுவரை ...உங்களிடம் ஓர் தற்காலிக
ப்ரேக்டைம்...
தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக