புதன், 9 பிப்ரவரி, 2022

கார்கோ பிக்அப்-9

சோமு -ஷாம் இருவரும் அந்த பெரியவரிடம்..ஏன் பாய்..இன்னும்..எத்தனை ஆண்டுகாலம் இப்படி இங்கே இருந்து ..உழைப்பு என்று ..
வாழ்வின் கடைசி காலத்தை இருக்கின்ற வரை ஊர் போய் செட்டிலாக வேண்டியதுதானே..என்றார்கள்.

அதற்கு அந்த பெரியவர்..நான் ஊர் போய்
செட்டிலாவது பெரிய விசயமில்லை..இதுவரை நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்க உறவுகள் இருந்தும் ..கண்டுக்காமல் போனவர்கள்..நான்
வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து விட்டு
போனால் பெட்டி வாசம் உள்ள வரை ஒட்டி இருப்பார்கள்..வாசங்கள் போன பின்னே அந்த உறவுகளும் போய்விடுவார்கள்.
பிறகு என் பேத்திக்கு செய்ய வேண்டியதை தடுக்கவே நேரிடும்..அதுவும் இல்லாமல் எனக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து அவ்வபோது சிகிச்சையை மேற்கொள்கிறேன்..இந்த அரபுதேசத்தில்
எத்தனையோ மனிதர்கள் ரத்தத்தை வியர்வையாக்கி குடும்பம் உறவு என்று தனக்கென்று இல்லாமல்..கூட பிறந்த பிறப்பு..தாய் தந்தை ஆகியோர்களின்
நல் வாழ்வுக்கு பணத்தை அனுப்பி வாழ்கின்றனர் .பின்பு அவர்களுக்கென்று சேர்த்து வாழ்வதற்கு வயது போகிவிடுகிறது...
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் ..மனசுல வச்சிக்கிங்கோ.. உங்க வாழ்வுக்கும் தனியாக ஒரு பங்கை சம்பளத்திலிருந்து சேமிக்க ஆரம்பிக்கவும் என்றார்..பணம் இருந்தால் தான் இந்த உலகம் உங்களை மதிக்கும்...அது போல் உங்க உழைப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் சம்பாரித்து கொள்ளுங்கள்...மது ..மாது சூது ..பாக்கு.. போன்ற தீய செயல்களில் எந்த நிலையிலும் நெருங்காதீர்கள்.. இளமை உங்களை போதைக்கான பாதையை இலகுவாக காட்டும்...அதில் மயங்கி..உங்கள் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள் பின்பு நீங்கள் எதிர் கொள்ளும்   தருவாயில் .நீங்கள் மிகவும் சிரமப்படுவீர்கள்.என்றார்..நான் மரணத்தை
விரும்புகிறேன்..ஆனால் அதற்குள் என் பேத்திக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து வைத்து நிம்மதியாக கண்ணை மூடனும்..என்றார்..எங்களுக்கு அந்த பெரியவரின் வார்த்தை ஒவ்வொன்றும் கேட்க கேட்க ஆச்சர்யமாகவும் மனதை
தட்டி எழுப்பும் விசயமாகவும் இருந்தது.

பிறகு அந்த பெரியவரிடம் விடை பெற்று
அடுத்த பார்சலை எடுக்க போகும் போது
ஹெட் ஆபீஸ்ல இருந்து போன்..

பில் போடும் போது அட்ரஸ் மொபைல் நம்பர் இவைகளை தெளிவாக எழுதுங்க..
முக்கியமாக போஸ்ட் ஆபீஸ் பின்கோடு தெளிவான எழுதங்க..

கஸ்ட்டமர் அனுப்பும் பொருள்களை என்ன என்ன இருக்கு ..என்று ஒன்றுக்கு மறுமுறை கேட்டுக்கொள்ளுங்க...இங்கே ஒரு கஸ்டமர்
பொருள காணோம் என்று வந்து நிக்குது..
பில்லுல பார்த்தால் எழுதி இல்லை..
ஆனால் இந்த கஸ்டமர் நான் சொன்னேன் என்று செல்லுது...பிறகு இன்னொரு விசயம். பார்சல் பொட்டியில்  மாநிலங்களை எழுதும் போது கவனமாக எழுதுங்க..பிறகு
அது மாநிலம் விட்டு மாநிலம் மாறிப்போக வாய்ப்பாக போய்விடும்.
சரி என்று விடைபெற்று போனை வைத்தார்கள்..மீண்டும்..போன் வந்தது
உடனே எடுத்தான் ஷாம்...அலோ 
கஸ்டமர் என்ன ஜி நான் தான் படிச்சி படிச்சி சொன்னேன் ல..
எனக்கு ரெண்டு வீடு ஆனால் ஒரே அட்ரஸ்
கீழ ஒரு வீடும் மேல ஒரு வீடும்..தனி தனியாக பார்சல் போட்டேன் கீழ. வீடுக்கு போய்விட்டது..மேல் வீட்டுக்கு ஏன் போகவில்லை என்றான் அந்த கஸ்டமர்
அப்படியா ரெண்டும் ஒரே நாளில் தானே அனுப்புனோம் அது எப்படி ஒன்றும்..மட்டும்
டெலிவெரி ஆகியிருக்கும் என்று..அப்படியே போனை துண்டித்து விட்டு கம்பெனி க்கு பின் அடித்து. விவறத்தை சொன்னான் ஷாம்..உடனே ஆபீஸ் பையன் அந்த கஸ்டமர் பில் நம்பரை அடித்து செக் செய்தால் அந்த அட்ரஸ்ல இரண்டு பார்சலுமே டெலிவெரி ஆகியிருக்கு என்று அதை அப்படியே. மொபைல் கேமாரவில் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தான் ஆபீஸ் பையன்....வந்த வாட்சப் மெஸ்ஸேஜ
ஓப்பன் செய்து பார்த்து அதை அப்படியே
அந்த கஸ்டமர் நம்பருக்கு அனுப்பி வைத்தான்..,கஸ்டமர் வாட்சப்ப பார்த்து வியந்து போனான் இரண்டு கிடைத்ததற்கான பேப்பர்ல இவ கையெழுத்து போட்டு இருக்குறா..
சரிங்க பாய்..நான் என் வீட்டுக்கு போன் அடித்து பேசி உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றவுடன் வீட்முக்கு போன் அடித்து தன் மனைவியிடம் கேட்டான்...உண்மையை சொல்லு
பார்சல் இரண்டு வந்ததா ஒன்று வந்ததா..
இரண்டு வந்தது..இரண்டுமே சரிசமமா இருக்குது..ஏன் என்ன விசயம்...அடியே இவளே இரண்டுமே உனக்கென எண்ணமோ கொண்டுபுடுவேன்..போய் மேல் வீட்டு  பார்சல கொடு.என்றான்..
அந்த சக்களத்திக்கு மட்டும் அதிக எடை ..எங்களுக்கு எடை கம்மியா இருக்குது
அது என்ன அவளுக்கு மட்டும் பொருள் அதிகம்..எனக்கு மட்டும் ஒரு வைட்டு இல்லாமல்..ஏதோ பேருக்கு அனுப்பனும் என்ற கடமைக்கு ...சரி எங்க சுத்துனாலும்
கீழிருந்துதானே மேலபோவ....
வாடி மவனே உனக்கு கச்சேரி இருக்கு...

தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக