கார்கோ பிக் அப் -8
----------------
இரண்டு அரபி பசங்க கார்கோ வாகனத்தை நோக்கி வந்ததும் ..எதிர்பாரமல் வந்த அந்த வாகனத்திற்கு வழி விட்டு முன்னோக்கி சென்றான் ஷாம்...
இந்த மாதிரி செய்வது அரபிக்கார பசங்கள் மட்டுமல்ல மற்ற அரேபிய தேசத்து பசங்க அதாவது சிரியா -எஜிப்து ..போன்ற நாடுகளைச் சேர்ந்த பசங்களும் இப்படி சேட்டை பண்ணுவாங்க..
ஒரு வழியாக சுதாரித்தவுடன்
வாகனத்தை வேறு கஸ்டமர் அட்ரஸுக்கு சென்றார்கள் ஷாம் -சோமு..
அங்கே பார்சல் போட ஒரு வயதான முதியோர் வயது ஐம்பதை கடந்திருக்கும்..
வாங்கப்பா..வாங்க..நான்தான் பார்சல் போடனும் ..என்று உள்ளே அழைத்து சென்றார்..சோமு ஷாம் இருவரும்..உள்ளே
போய் பர்சல் எல்லாம் வைட் போட்டு பில் போட்டு அட்ரஸ் கேட்கையில்..அந்த அட்ரஸ்
ஒரு ஹாஸ்டல் ..ஆமாம் அது அவருடைய பேத்தி படித்து கொண்டிருக்கிறாள்..
அதை சற்று எதிர்பாரமல் ஷாம் ..ஏன் பெரியவரே இதெல்லாம் ஒரே அட்ரஸ்க்கா..ஆமாம்..என்றார் அந்த பெரியவர்..ஏன் உங்கள் மனைவி மக்கள் இவர்களுக்கு அனுப்பவில்லையா..என்று சோமு இடையில் கேட்டான்...உடனே அந்த பெரியவர் முகம் சோகமாகியது..எல்லாம்
இருந்தாங்க..இப்ப இல்லப்பா...
எங்களுக்கு ஒரே மகள் அவளுக்கும் நல்ல இடத்திலதான் இதோ இந்த வீட்டிலேயே வேலை பார்த்து ..இந்த அரபியும் என் மகளுக்கு தேவையான நகைகள் வாங்கி கொடுத்தாள்..நல்ல அரபி நான் இங்கு முப்பது வருடமா இந்த ஒரே வீட்டில் தான் வேலை செய்கிறேன் அந்த ஒரு காரணத்திற்கு எனக்கு நல்ல மரியாதை ...நான் முதல் முறை வரும்போது என் கிழவன் பிள்ளைகள் ரொம்ப சிறிய வயசு இப்ப அதுதது பெரிய பிள்ளைங்களாகி விட்டது..அப்படியே காலம் போனது ..
என் மகளுக்கு மணமுடித்து கொடுத்தேன்
அதுவும் நல்லா வாழ்ந்தது..நாங்களும் நல்லா சந்தோசமா இருந்தோம் ..மகள் கடைமையை நிறைவேற்றி விட்டோம்
மகளுக்கும் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது அது வளர்ந்து ஐந்து வயதை கடந்த சமயம் மகள் மாமியார் வீட்டுக்கு சென்று அங்கும் இங்குமாக வரப்போக இருந்தது..பிறகு மகளின் மாமியாருக்கு உடல் நிலை மோசமாக தொடங்கியது ..இதனால் தனது தாய் வீட்டுக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது..பிறகு என் மனைவிக்கும் துணைக்கு ஆள் வேண்டுமென்று இந்த அரபுதேச வாழ்க்கையை முடித்துவிட்டு செல்வோம்
என்று கிளம்பினேன்...அப்போது இந்த அரபி என்னை விடுவதற்கு மனமில்லை..
வேண்டுமென்றால் உன் மனைவியை இங்கு தருவிப்போம் ..இங்கு உனக்கு தனியாக தங்கும் வசதியை ஏற்படுத்துகிறேன் என்று..சொன்னான்..
நான் முடியாது அது சரிபட்டு வராது..என்று
கிளம்ப ஆயத்தமானேன்..கடைசி கட்டமாக என் அரபி குடும்பம் யாவுமே என்னை வழியனுப்பி வைத்தது ..நானும் கிளம்பினேன் ..அப்போது என் கிழவன்-கிழவி சொன்ன வார்த்தை சேகர் நீ எப்படி வேண்டுமானாலும் இங்கு வர நாங்க விசா அனுப்ப தயார்..என்று சொன்னார்கள்..சரியென்று நானும் கிளம்பி வந்தேன்..எப்படியும் போய் ஒரு வருசம் நிறைவேறியிருக்காது..என் மகள் என்னை
பார்க்க வந்து என்னோடு ஓரிரு நாட்கள்
தங்கியிருப்பாள்..அவ்ள மகள் என்மீது அதிகப்பிரியம் தாத்தா தாத்தா என்று என்னை விட்டு பிரிய மாட்டாள்..ஒரு நாள் என் மனைவியும் மகளும் ..(மகள் ஸ்கூட்டி ஓட்டுவாள்)ஸ்கூட்டியில் போகும்போது எதிரே வந்த லாரியின் அதிவேகம் கட்டுப்பாடை இழந்து எதிரே வந்த அத்துனை வாகனங்களையும் இடித்துதள்ளியது அதில் முதலாவதாக வீசப்பட்டது என் மனைவி மகள் இருவருடைய உடலும்தான்..ஏதோ என் பேத்தி என்னோடு இருந்ததால் அவள் உயிர்
என் கையிலே...உயிரோடு ஒன்றாய் போனவர்கள் ..ஒன்றாக சடலமாக திரும்பியது ..அந்த ஏரியாவே கண்ணீரில் மூழ்கியது..பிறகு அதற்கான கடமைகள் எல்லாம்..முடிந்த பிறகு என்மருமகனிடம் கேட்டேன் என் உசுருங்க இரண்டுமே என்னை விட்டு போய்விட்டார்கள்..இருப்பது இந்த ஒரு உசுருதான்..இந்த பேத்தியை என் கண்ணுள்ள வரை நான் வளர்த்து வருகிறேன் என்று கேட்டதும்..அந்த மனுசன் நல்லது மாமா மகள் உங்க கிட்டயே இருக்கட்டும் என்றார்..உடனே நான் என் பேத்திக்காக வாழனும் என் பேத்தியும் நல்லபடியாக வாழனும் ஆதலால்..என் பேத்தியை ஒரு ஹாஸ்ட்டலில் படிக்க வைக்கப்போகிறேன் என்றார்..உடனே
மருமகன் குறுக்கிட்டு ஏன் மாமா அதுதான் எங்க வீடு இருக்குதே..ஏன் ஹாஸ்டல் என்றார்..இல்லப்பா அவ உங்க வீட்டில் இருந்தாலும் எங்க வீட்டில் இருந்தாலும்...
இருவரின் இழப்பு பெரும் சோகத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும்.அவ சுதந்திரப் பறவையாய் வாழட்டும் என்னடா ஹஸ்ட்டலில் சுதந்திரமா என்று கேட்க வேண்டாம்..கிடைக்கும் அதற்கு அங்கு வாய்ப்பு இல்லை அதாவது ஹாஸ்டல் பிரச்சனைகளைத்தான்..அப்படி ஏற்படாத வாறு செய்ய அங்கு பணிபுரியும் ஆசிரியர் எனக்கு தெரிந்த பால்ய நண்பரின் மகன் தான் ஆதலால் அங்கு என் பேத்திக்கு நல்ல பாதுகாப்பான வசதி சிறப்பான படிப்பு போன்றவற்றை நல்லாவே அமையும்.என்று
என் பேத்திய சேர்த்து விட்டேன் ..பிறகு என் பழைய அரபிக்கிட்ட பேசினேன் அவர்களும் விசா அனுப்பி விட்டார்கள்..அதற்கு பிறகு இங்கு தான் என் பிழைப்பு..
இதெல்லாம் என் பேத்திக்குத்தான்..என் பேத்திக்கு அனுப்பி பொருள்கள் பார்சல் இதுவரை நல்லடபடியாக எந்த மிஸ்ஸிங்கும் இல்லாம கிடைத்தது இடையில் கூட கடைசியா அனுப்புன பார்சல் ரொம்ப டேமாஜ் என்று சொன்னாள் என் பேத்தி காரணம் ..நான் ஷாம்பு பாட்டிலை சரியாக டேப் அடிக்காம போட்டுவிட்டேன் அதனால் தான்.ஆனா இதுக்கு முன்பாகவே நான்
பத்து பண்ணிரெண்டு வருசமா உங்க கார்கோ கம்பெனில தான் இதுவரை பார்சல் அனுப்புறேன்..என்று சொல்லி முடித்தார்..
ஷாம்-சோமு ஏன் பாய் இன்னும் எத்தனை வருசம் இப்படி உங்களுக்கு வயசு இப்படி அதிகமாகி விட்டது..என்றார்கள்..அதற்கு
அவர் சொன்ன பதில் தான் ..எங்க நெஞ்சை
கொஞ்சம் குமுற வைத்தது...அப்படி என்ன சொல்லி இருப்பார்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக