கார்கோ பிக் அப்-பார்சல் -5
----------------------
ஷாம் அப்படியே அவர்கள் இருவரும்
பேசிக் கொண்டிருப்பதை கவனித்து கண்டுக்காமல் நகர்ந்தான்.
சரி வாங்க பாய்...வந்து அட்ரஸ் சொல்லுங்க ..யார் பெயருக்கு அனுப்புறீங்க..என்றதும் எல்லாம் சொன்னார்...
இந்த பார்சலில் என்ன என்ன இருக்கு சொல்லுங்க...எலக்கட்ரிக்கல் எலக்ட்ரானிக் ..பாடிஸ்ப்ரே..குவைத் பால் டப்பா..இவைகள் ஏர் கார்கோவில் அனுப்ப தடையுள்ளது..போன்வகையாறா எல்லாம் அனுப்பவதற்கு தடை....என்று சோமு சொல்லவும்..
அதெல்லாம் உங்க ஆபிஸ்ல சொல்லிவிட்டார்கள்...அதெல்லாம் என்
லக்கேஜ்ல எடுத்துட்டு போகிறேன்.
என்று எல்லாம் சரி பார்த்து கையெழுத்து போடுங்க என்றான் சோமு
சொன்ன முக்கியமான தகவல்..யார் இந்த பொருளை வாங்குவதோ அவர்களுடைய ஆதார் கார்டு காப்பி
உங்களுடைய குவைத் சிவில் ஐடி காப்பி
இவைகளை இப்ப நான். பேசின வாட்சப் நம்பருக்கு அனுப்பவும்.
ஏன் பாய்..அதெல்லாம் கேட்குறீங்க..
ஆதார் கார்டு ஏன் உங்களுக்கு..என்றார்
கஸ்டமர்..
அது எங்களுக்கில்லைங்க இந்திய
கவர்மெண்ட் ஏர்போர்ட் கார்கோ ஆபீஸ்ல கேட்கசொல்லுது..இது உங்களுக்குத்தான் போகுதா..நீங்க தரும் அட்ரஸ் ஆதார் கார்ட் அட்ரஸ்..
எல்லாம் செக் செய்து தான் பொருளை வெளியே அனுப்புவாங்க.
முன்பொரு காலத்துல அனுப்புனது போல இப்ப எந்த கார்கோவும் போறது இல்லை...
சரி்சரி என்று நான் அனுப்பி வைக்குறேன் என்று விடை பெறுமுன் அப்புறம் மிக முக்கியமான விசயம் பாரசல் வாங்கும் போது எடை மிசின் அவங்க கொண்டு வருவாங்க அதில் எடைய போட்டு பார்த்து பிறகு பார்சல பெற்றதற்கான கையெழுத்து போட சொல்லுங்க உங்க வீட்டில்...உள்ளவர்களிடம்..என்றார்கள் சோமு.ஷாம் இருவரும்.
ஒரு வழியாக இந்த ஏர்போர்ட் கஸ்டமரை
எடுத்தாச்சு...
அண்ணே இப்ப மணி பத்தரை..வாங்க சாப்பிடுவோம் என்று காலை சாப்பாடு சாப்பிட ஆரம்பித்தனர்.
சாப்பிட தொடங்குகையில்..சோமு உடைய
வாட்சப்புக்கு போன் வந்தது...யாரு இந்த நேரத்துல..என்று அவனுடைய போனை எடுத்தான்...எடுத்து பேசிவிட்டு..சாப்பிடுவோம் என்று பார்த்தால் புது நம்பராக இருந்தது..
யாரு...பேசுறா...யாரும் நீங்க...நான்...ஷாம் உடைய அம்மா பேசுறேன் ஷாம் இருக்கானா...இதோ
அண்ணன் இருக்காப்பல..
ஷாம் வாங்கி பேச ஆரம்பித்தான்
என்னம்மா..என்ன விசயம்...தம்பி உன் தங்கச்சி மாப்ள பைக்ல போகையில்
மாடு குறுக்க வந்ததால் அதில் மோதி அடிபட்டு கிடக்குறாருடா...காலில் மட்டும் தான் அடி
நீ எதுவும் பயப்படாதே ஸ்கேன் போட்டு பார்த்தால் தான்
என்னா எப்படி என்று சொல்ல முடியுமாம்....அவருக்கு இன்னும் இருபது நாளில் பயணம் போகிற நாள் நெறுங்குது..
பணம் தேவைப்படுதுடா..இப்ப அவர வைத்தியம் பார்க்குறதுக்கு .
உன்னிடம் எதுவும் பணம் இருக்குதாடா..இருந்தா அனுப்புறியடா..தம்பி..
ஷாம் உடைய தங்கை காதல் கல்யாணம் ..தங்கை கணவர் வீட்டை எதிர்த்துத்தான் இவர்கள் கல்யாணம்...
எல்லாம் சாதிங்கற பேய் பிடித்து திரியும் மனுசப்பேய்ங்களின் காலக்கொடுமை..
ஷாம் சரி சரி நீ பணம் அக்கம் பக்கம் வாங்கி வைத்தியம் பாரு.
நான் முதலாளி இடம் பேசி அட்வான்ஸ் வாங்கி அனுப்புறேன்.என்றான்..
அதற்கிடையில் சோமு எடுத்த பார்சல்களின் பணம் காசுகளை
சரி பார்த்தான்...அப்போது ..கணக்குல
45 தினார் குறையுதே எப்படி..என்று
பல தடவை கணக்கு பார்த்ததை ஷாம் கவனித்தான்...டேய் என்னடா
பணத்தை யாரிடமாவது வாங்கவில்லையா...எவ்வளவு குறையுது 45 தினார் என்றவுடனே தம்பி பணம் குறைந்தால் நம்ம அக்கௌண்ட்ல ஏறி
சம்பளத்தை முழுசா வாங்க முடியாது...தெரியும்ல....
சரி அந்த ஏர்போர்ட் பார்ட்டியிடம் தான் விட்டிருப்பா..எதுக்கும் அந்த ஏர்போர்ட் பார்ட்டிக்கு போன் போட்டு கேளு...சொல்லு..என்றான் ஷாம்.
உடனே சோமு அந்த கஸ்டமருக்கு போன் அடித்தான்...போன அவன் எடுக்க வில்லை..மறுபடி மறுபடி அடித்தான் எடுத்தான்...எடுத்தது அவனில்லை அவன் கூட வேலை செய்யும்..டீ பாய்..
அண்ணே நான் இப்ப வந்து கார்கோ் எடுத்தேனல்லவா..ஆமாம் வந்தீங்க..
ஆமாம் நீங்க யாரு பேசுறது நான் டீ பாய் பேசுறேன் ..கொஞ்சமுன்னாடி கார்கோ போட்ட அந்த ஆளு எங்கே அவர் இப்பத்தான் ஏர்போர்ட் போனார்..ஏன் சார் என்ன பிரச்சனை..
இல்லண்ணே...பார்சல் போட்டாக..அதற்கான பணத்தை நாங்க வாங்காமலே வந்துவிட்டோம் அதுதான் போன் பண்ணுனேன்..அவர் நம்பர் இருந்தா கொடுங்கள்...என்றான் சோமு..
உடனே அந்த டீ பாய் நம்பரை அனுப்பி வைத்தார்..
அந்த நம்பருக்கு அடித்தான் சோமு...அடித்த கொஞ்ச நேரத்தில் உடனே அலோ ..என்ற குரல் கஸ்டமருடையது..யாரு...
அண்ணா...நீங்க கார்கோ போட்டீங்க தானே ஆமாம் இப்பத்தான் போட்டேன்..
ஏன் என்ன விசயம்.. நீங்க பார்சல் போட்டதுக்குறிய முன்பணம் 45 தினாரை வாங்காமலே ..வந்துவிட்டோம்.என்றான் சோமு..
உடனே அந்த கஸ்டமர் ஐயையோ நீங்க காசு வாங்குற அவசரத்தில். நானும் ஊர் போகிற அவசரத்தில்..ஆனால் காச நண்பர் கையில் தான் கொடுத்தேன் எதுக்கும் என் நண்பர தொடர்பு கொள்ளுங்களேன்....
இது என்னடா சோதனை..என்று..உடனே
அவர் நண்பர தொடர்பு கொள்ள ...முயன்ற போது அவருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டது....
ஒரு பக்கம் ஷாம் தங்கை கணவர் பிரச்சனை...
இந்த பக்கம் சோமு பில்லுக்கு காசு வாங்க மறந்த கதை...
இப்படியான நிகழ்வுகளுக்கு நடுவிலே..
கம்பெனிக்கு பதில் சொல்லனும்...
.அந்த நண்பரின் தொடர்பு துண்டிப்பு...
கார்கோ பிக் அப்..ஒவ்வொரு நாளும்
போய் வரும்...வரை இதயத்தில் அதிவேக துடிதுடிப்பு...
வாங்க..நாளைய தொடர தொடரும் வரை
அடுத்த கஸ்டமர ....