கோடாரி தைலம் கேட்கும்....
கொலக்கட்டை சாரும் ஞாபகம்,
கலகலப்பாய் சிரிக்க வைக்கும்
பிச்சகனி சாரும் ஞாபகம்.
கோரமாய் பார்க்கும்
ஓரக்கண்ணு சாரும் ஞாபகம்,
தோள்கொடுத்து பழகும்
தொப்பி சாரும் ஞாபகம்.
தினற வைக்க பாடமெடுக்கும்
திக்குவாய் சாரும் ஞாபகம்.
தொடுவானமாய் தோன்றும்
நெடுங்கொக்கு சாரும் ஞாபகம்.
நாகரீகமாய் வளம் வரும்...
பேண்டு சாரும் ஞாபகம்.
அவ்வபோது அதட்டும்
ஆயமாக்கள் ஞாபகம்,
அரவணைத்து நடத்தும்
செந்தமிழ் செல்வி டீச்சர் ஞாபகம்.
வெகுளியாய் பேசும்
கலாவதி டீச்சர் ஞாபகம்,
உரிமையோடு உறவாடும்
பிரபு அம்மா டீச்சர் ஞாபகம்.
பட்டுக்கோட்டையிலிருந்து வரும்
நூரஜஹான் டீச்சர் ஞாபகம்.
ஒரத்தநாட்லேந்து வரும்...
சகர்பான் டீச்சர் ஞாபகம்.
பேட்டையிலிருந்து வரும்
ராஜேஸ்வரி டீச்சர் ஞாபகம்,
கல்லூரி வாழ்வு தந்த
சங்கத்து பள்ளி ஞாபகம்.
என் பிள்ளைகளும் அங்கே
படிப்பதில் சந்தோச ஞாபகம்.
நட்புகளாய் கிடைத்த
வகுப்பறைகள் ஞாபகம்.
கல்வெட்டாய் போன
கிறுக்கிய...அவளுடைய
பெயர் ஞாபகம்.
பருவங்கள் கடந்தும்
மாறாத ஞாபகம்.
பரம்பரை பரம்பரையாய்
பார்த்து ரசிக்க முடிந்த ஞாபகம்.
மாணவனாய் சென்ற பள்ளிக்கு
கவிஞனாய் செல்வதே ...பேரானந்தம்.
என் பள்ளிக்கு
நான் கொடுக்கும்.ஞாபகம்
மாற்றம் காண முடியாத இடம்
தோற்றாளும் வெற்றியடைய..
போராட வைக்கும் நாம்
படித்த பள்ளிக்கூடம்..
இவன்.
"சூரியக் கவிதீபம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக