இதுவரை ...
மூன்றாவதாக பார்சல் ..ஊருக்கு போகிற கஸ்ட்டமர் பார்சல் அனுப்ப 90 தினார் கட்ட பணமில்லாமல் ..பக்கத்து வீட்டு நபரிடம் உதவிக்காக தொடர்பு கொண்டார்..
இனி......
அலோ யாரு..நான் தான் மச்சான்..ஊருக்கு போகுற நேரத்துல கார்கோ போட பணம் குறைவாக இருக்குது உங்கிட்ட நாப்பது தினார் இருக்குதா..டா..
இல்லையடா மச்சான் சம்பளம் இன்னும் போடவில்லையடா...
சரி இது எந்த கார்கோ..டா
அதுதான் மச்சான்
நேத்து நீ குடுத்தியல்ல ஒரு கார்கோ கார்டு..அந்த கம்பெணி தான்..
ஓ...அப்படியா
அப்ப இரு இந்த வாரேன்..
அண்ணே சீக்கிரம் ஒரு முடிவெடுங்க..
எங்களுக்கு அடுத்த ஆர்டரு ரெடியா இருக்கு அப்புறம் அந்த ஆர்டர் மிஸ் ஆகிவிட்டா..நாங்கதான் பதில் சொல்லனும் என்றான்...ஷாம்.
இருங்க பாய்..இதோ என் நண்பன் வந்துட்டான்..
அலோ வணக்கம் ..என்று அறிமுகமானார் அந்த நண்பர் ..
சொல்லுங்க எவ்வளவு குறையுது.
90 தினார் மொத்தம் இவர் ஐம்பது தினார் தான் இருக்குது என்றார்..
பாக்கி 40 தினார் இல்லையென்கிறார்
அதுதான் உங்களிடம் உதவிக்கு அழைத்தார்..என்றான் ஷாம் உடனே அந்த நண்பர் தன் நண்பரை பார்த்து..
உனக்கு என்னா எல்லாம் அனுப்பனுமாடா....
பாதி ஏர் கார்கோ. பாதி ஸீ கார்கோ அனுப்பு மீதமுள்ளதை ..ஸீ பார்சலுக்கு மட்டும் முன்பணம் கட்டி விடு..பாக்கி பணம்
நான் சம்பளம் வாங்கி கொடுக்கிறேன் என்றான் நண்பன்.
இல்லை எல்லா பார்சலும் ஒரே நேரத்தில் வரவேண்டும்..அது எல்லாம் முக்கியமான பொருள்கள் மச்சான்.
எனக்கு எல்லாமே ஏர் கார்கோ அனுப்ப மட்டும் எப்படியாவது உதவி செய்..நண்பா.
உடனே நண்பர்..வந்து ஷாம் இடம்
சார் நான் உங்க கார்கோவில் தான் பார்சல் எல்லாம் அனுப்பிகிட்டு இருக்கிறேன்...இதை நீங்க எல்லாமே ஏர் கார்கோவிலே போடுங்களேன்
ஆனால் பணம் பேலன்ஸ் போட்டு எடுங்க நான் மீத பணம் மாலியா ஆபீஸ்ல வந்து கட்றேன்..என்றார்.
சார்.நீங்க சொல்றதில் நம்பிக்கை இருக்கு ஆனால் ஏர் கார்கோ பார்சலுக்கு பேலன்ஸ் போட்டு விட்டால் நீங்க மீதமுள்ளு காசு கட்டும் வரை சென்னை ஆபீசில் தான் இருக்கும்..
பேலன்ஸ் பணம் கட்டும் வரை பார்சல் வெளியாகாது. என்றான் சோமு
சரி நீங்க எந்த ஆபீஸ்கு போன் அடிச்சி ஆர்டர் கொடுத்தீங்க...இதோ இந்த நம்பர் தான்..
ஷாம். வாங்கி பார்த்தான்..ஓ..இதுவா..
இது ஜஹ்ரா ஆபீஸ் நம்பரு..
சரி இருங்க...
ஷாம் ஜஹ்ரா நம்பருக்கு தொடர்பு கொண்டான்..அலோ சாரே..ஒரு ஏர்போர்ட்
ஆர்டர் கொடுத்தீங்களா...என்றான்
இல்லையே என்றான்..
கஸ்ட்டமர் உங்க நம்பர்ல தான் பேசுனதாக சொல்லுது..உடனே போன கஸ்ட்டமர் இடம்
கொடு என்று ஆபீஸ் நபர் சொல்லவும்...
கஸ்ட்டமர் வாங்கி பேசினார்..ஆமாம்
நீங்க எந்த ஆபீஸ்க்கு போன் போட்டீங்க..
உங்க கிட்டத்தான் பேசினேன்..
எப்ப..?
நேற்று..என்றார் கஸ்ட்டமர்..
நேற்றா..
உடனே ஆபீஸ் ஆர்டர் புக்க எடுத்து
நேற்றைய ஆர்டரை செக் பண்ணும் போது..அந்த கஸ்டமர் நம்பர் இருந்தது..
ஆமாம்...நேற்று தான் உங்களுக்கு டிரைவர் போன் பண்ணுணாங்க நீங்க ஏன்...எடுக்கவில்லை..இல்லை நேற்று
அரபி வெளியே கூட்டிட்டு போய்டான்..
அதுதான் நேற்று நான் எடுக்க வில்லை..
என்றார் கஸ்ட்டமர்...அப்ப ஏன் இன்று இந்த ஆபீஸ்க்கு போன் அடிக்க வில்லை.என்றான் கனீர் குரலுடன் ஆபீஸ் இடமிருந்து...நான் அடிக்கும் முன்பே உங்க ஆட்கள் எனக்கு அடிச்சுட்டாங்க..சரி சரி..இப்ப என்ன
பார்சல் போட்டாச்சா...இன்னும் இல்லைங்க..பணம் குறைவா இருக்குது.. ஏர் கார்கோ அனுப்பனும் ஸீ கார்கோ அனுப்ப மனமில்லை ..எல்லாம்
ட்ரை ஃபுட் காஸ்மெட்டிக்ஸ்..நடக்க விருக்கும் வீட்டுவிசேசத்துக்குறிய பொருள் என்றார் கஸ்ட்டமர்...மொத்தம் எவ்வளவு 90 தினார் 50 தினார் தான் கையிலிருக்கு..வேறு 1-2 தினார் தான் சில்ற இருக்குது..மீதம் 40 தினார் என் நண்பர் வந்து கட்டுவேன் என்றார்
உங்க நண்பர் எப்ப.. கட்டுவார்...இன்னும் பத்து நாளில் கட்டிவிடுவார்...என்ற கஸ்ட்டமர் பதில்..
உடனே..அலோ ஏர் கார்கோ 25 நாள் டெலிவெரி டைம்..
( இடையில் கஸ்ட்டமர் நண்பரிடம் குறுக்கிட்டு என்ன மச்சான் 25 நாள் சொல்றாங்க...என்றான்
அதற்கு நணபர் அப்படித்தாண்டா சொல்வாங்க எனக்கும் அதுதான் சொன்னாங்க ஆனால் 15 நாளில் கிடைத்துவிட்டது..அதனால் நீ கவலைப்படாத நான் பேலன்ஸ் கட்டிவிடுகிறேன் என்றான். )
..ஆனால் நாங்க உங்க பார்சல் பணம் கட்டுனாதான் இங்கிருந்தே போகும் அப்படியே போனாலும்...அங்க அதாவது சென்னை குடோன்ல தான் கிடக்கும்..
பணம் தாமதமானால்..உங்க பார்சல்
டெலிவெரி ஆக தாமதமாகும்...
சீக்கரம் பணம் கட்ட சொல்லுங்க உங்க நண்பரிடம்.. என்ற உடனே அப்படியே
டிரைவர்ட்ட போன கொடுங்க...ஷாம்.
சொல்லுங்கண்ணே...MNP (MONY NOT PAIT) என்று பாரசல் மேலயும் பில்லில் எ எழுதி C/O என் பெயர் போடு..
ஒரிஜினல் பில்ல.. கொடுக்காதே..கம்பெணி என்வெலப்ல சும்மா எழுதி கொடு..எவ்வளவு வாங்கியதும்..மீதம் எவ்வளவு என்றும்.
பார்சல் மொத்த வைட்டு.பார்சல் ஐட்டம்
இன்றைய தேதி இப்படி போட்டு
உன் நம்பர்..என் நம்பர் இவைகளை எழுதி கொடுத்து பார்சல எடுத்துட்டு வா..நான் மேனேஜர் அல்லது அக்கௌண்டர் இடம் பேசிக்கொள்கிறேன்..மறந்திடாதே
கஸ்ட்டமர் நம்பர்..கஸ்ட்டமர் உடைய நண்பர் நம்பர் இவைகளை எழுதி வாங்கிக்கோ..ஒரிஜினல் பில் பக்கம்
கஸ்ட்டமர் ஏரியா அட்ரஸ் இவைகளை எழுத மறந்திடாதே..போன் எடுக்காட்டி கூட..நேரில் போய் அவருடைய நண்பரை சந்திச்சு பேலன்ஸ வாங்கிக்கலாம். என்று ஜஹ்ரா ஆபீஸ்..இடம்...இருந்து கிரீன் சிக்னல்.
கஸ்டமர் சந்தோசத்துடன்...அப்படி.என்று
கொஞ்சம் தயக்கத்துடன்...டிரைவரிடம்
பணம் பேலன்ஸ் என்பதால பார்சல அனுப்பாம இருக்காதீங்க..பா..அதில் தான் முக்கியமான பொருள் எல்லாம் இருக்கு,..என்றார்..
அண்ணன் உங்க நண்பர பணம் கட்ட சொல்லி நீங்க தான் பாஃலோ பண்ணனும் அவர் பணம் கட்டி விட்டால்..
உங்க பார்சல் பணம் கட்டுன ஓரிரு நாட்களில் டெலிவெரி ஆகிவிடும்..
உங்க பார்சல இங்க வைத்தால் எங்களுக்குத்தான் சிரமம்..சரி
சோமு பில்ல போடு நான் பார்சல நம்பர் போட்டு லோடு ஏத்துறேன் வண்டியில்..என்று..தயாரானார்கள்..
அப்புறம்...சோமு...கஸ்ட்டமர்..கையில் பணமில்ல ஆதலால் கொஞ்சம் இன்ச்சூரன்ஸ் பேக்கிங் இவைகளை கொஞ்சம் கம்மி போட்டு ..ஒரு 85 தினார்
வருகிற மாதிரி போடு..என்றான் டிரைவர்..45 பெய்டு ..40 தினார் பேலன்ஸ் என்று கவர்ல எழுதி கொடு..
ஒரிஜினல் பில்ல கொடுக்காதே அதில்.
C/O ஜஹ்ரா ஆபீஸ் ஸ்டாப்ஃ பெயர எழுது என்றான்.
அந்த கஸ்ட்டமர் அவர் நணபர் அப்போது தனிமையில் போசிக் கொண்டிருந்தார்கள்...அப்படி என்ன பேசினார்கள்..அதை நாளை பார்ப்போம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக