நேற்று....
தொடர்ந்து மூன்று பிக் அப் ..அதில்
இரண்டு எடுத்தாச்சு..மூன்றாவது கஸ்ட்டமர் இடம் பேசுவதற்கு முன்பு...இரண்டாம் கஸ்ட்டமர் அவருடைய முந்தைய பார்சல் தாமதமாக டெலிவெரி ஆனதற்கான விளக்கம் பரிமாறப்பட்டன.தன் கம்பெணி எப்படி செயல்படுது முதலாளி எப்படி செயல்படுகிறார்..என்று சோமு சொல்லிக்காட்டினான்..
இனி இன்று.............
அலோ ..
கார்கோவிலேர்ந்து பேசுறோம்
பார்சல் ரெடியா இருக்குதா...
எல்லாம் ரெடியா
இருக்குது...எவ்வளவு நேரமாகும்..
இது கஸ்ட்டமர்...இதோ இன்னும்
பத்து நிமிசத்துல வந்து விடுகிறோம்...சோமு சொன்னதும்..
கஸ்ட்டமர் சரிங்க நீங்க சீக்கிரம் வந்து விட்டால் பார்சல் வைட் சம்திங் தெரிந்து விடும்..அப்பறம்..ஏர்போர்ட்ல போய் வைட் கூடுதலானால் அதுக்கு டூட்டி கட்ட சொல்லுவான்..ஒரு கிலோவுக்கு..அவன் வைக்குறதுதான் ரேட்டு...ஐந்து தினாரும் ஆகலாம் ஆறு தினாரும் ஆகலாம்...என புலம்பினார் கஸ்ட்டமர்.
அண்ணே இந்த ஆர்டரும்...பேக்கிங் தான்..இன்று யார் முகத்துல விடிஞ்சதோ..நம்ம பொழப்பு...சோமு
ஷாம் இடம் புலம்ப ஆரம்பித்தான்..இங்க பாரு சோமு இந்த பொழப்பே இப்படித்தான்..இப்படி வந்தாதான் நாம அதிகமான பார்சல் எடுக்க முடியும் ..செஞ்சுரி போட முடியும்.
எந்த உழைப்பும் நோகாம திங்குற நொங்கு போல அல்ல...நடுக்கடலில படகுல போய் வலையை வீசி...மீன் பிடிக்கிற காரியம்.
சரியா..இன்று நீ இந்த இரண்டு மூன்று ஆர்டருக்கே அலுத்துக்கிறியே...இப்படி
அலுத்து வெறுத்து போயிருந்தா..நாம
இந்த கம்பெணியில வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது..காரணம் இந்த கம்பெணியை உருவாக்கிய முதலாளி உடைய அயராத உழைப்பை எண்ணிப்பாரு சோமு...என்றான் ஷாம்..
ஆமான்னே ்.அப்ப நம்ம முதலாளி படிச்சு சம்பாரித்து இந்த கம்பெணியை உருவாக்க வில்லையா...!..சோமு ஆச்சர்யத்துடன் கேட்டான் .படிச்சவங்க ஆரம்பித்திருந்தால் இந்த கம்பெணி எப்பவோ இழுத்து மூட பட்டிருக்கும்..இது
ஒரு பொன் முட்டை இடுற வாத்து மாதிரி..நாம
நம்ம திறமையை உடல் வலிமையை
செலவு செய்ய செலவு செய்ய..தினம்
அதற்கான பலன் கிடைக்கும்..அதனால் தான்..முதலாளி நாம எடுக்கும் ஒவ்வொரு பில்லுக்கும் போனஸ்..மற்றும் கிலோ அதிகாமானால் செஞ்சுரி போனஸ் என்று நமக்கு கொடுத்து நம்மையும்...சந்தோசப்படுத்துறாப்ள.!
அந்த போனஸ் என்கிற ஒன்று இல்லை என்றால் நமக்கு ஆர்டர் எடுக்குற ஆர்வம் குறைந்திருக்குமா இல்லையா..?
ஆமான்னே...நேத்துக்கூட பக்கத்துல இருக்கும் கார்கோ கம்பெணியில் வேலை பார்க்கும். டேவிட் சொன்னான்
உங்க கம்பெணியில் நிறைய சலுகை இருக்குது...என்றும்...மாதம் இடையில் மீட்டிங் நடத்தி அதில் தொழிலாளர்களையும் கௌரவபடுத்தும் உங்க முதலாளி கிரேட் என்றான்..அப்படி என்ன அண்ணன் நம்ம முதலாளி நமக்கு செய்வாங்க.!அதை இன்னொரு நாளைக்கு சொல்றேன்..முதலில் ஏர்போர்ட் கஸ்ட்டமருக்கு போன் அடித்து அட்ரஸ வாங்கு .அப்புறம் அவன் போகிற அவசரத்துல வேறு கார்கோ கம்பெணிக்கு போன் போட்டு நம்ம ஆர்டரு கேன்சலாகிட போகுது..
அண்ணன் ஆமாம் காலை சாப்பாடு சாப்பிட்டோமா..
இன்னும் இல்ல என்றான் ஷாம்
இதோ..இதை எடுத்து விட்டு..சாப்பிடுவோம் அப்போது நேரம்
உனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம்..என்று
பசியோடு சோமு-ஷாம் ஏர்போர்ட் கஸ்ட்டமரிடம் சென்றார்கள்..வாங்க ..
முதலில் நான் சொல்றதை கேளுங்க..
இதுதான் நான் அனுப்பவேண்டிய பார்சல் எல்லாம் ரெடியா இருக்குது
பேக் பண்ணாம அப்படியே இருக்குது..
இது நான் ஏர்போர்ட் எடுத்து போகிற லக்கேஜ் ..இந்த ரெண்டு லக்கேஜ்..40 கிலோ இருக்கனும் என் கை லக்கேஜ் ஏழு கிலோ இருக்கனும் எல்லாம் ..எனக் கென்னவோ வைட்டு அதிகம் இருப்பதாக தெரியுது...நாம சாமான் வாங்கித் தருகிறேன் கொண்டு போறியா என்று கேட்டு விடுவோமோ என்று அவனவன் சொல்லாமலே ஊர் கிளம்பிடுவானுங்க...நாம போறது மட்டும் எப்படித்தான் தெரியுதோ...எல்லாம் வேண்டப்பட்ட ஆட்கள்...அதனால் எதையும் திருப்பி கொடுக்க மனமில்லாமல் புலம்பினான்..
சோமு..விடம்,
ஏன் பாய் கவலைப்படுற மீதம் உள்ளதை கார்கோ வோடு போடுங்க..
உங்க லக்கேஜ மட்டும் எடுத்துட்டு போங்க மத்தவங்க லக்கேஜ கார்கோவில் போடுங்க...என்றான்..
இல்ல இல்ல எதுவானாலும்...என் லக்கேஜ போடலாம்...ஆனால் பணம் குறைவான இருக்குது...இதோ நான் அனுப்ப வேண்டிய கார்கோ பார்சல வைட் போட்டு அதுக்கு மட்டும் கொட்டேசன் கொடுங்கள்...
சோமு வைட்டு போட்டு பார்த்தான்..
பிறகு மீதமுள்ள லக்கேஜ சேர்த்து வைத்து அதை வைத்து ஒரு டோட்டல் கணக்கை போட்டு பார்த்தான்..பாய்..
நீங்க அனுப்ப வேண்டிய கார்கோ ரெண்டுக்கும்...அறுபது தினார் வருது..
இதோடு இணைத்து மீதமுள்ள லக்கேஜ கூட்டி போட்டு பார்த்தால் கூடுதலாக முப்பது தினார் வருது.ஆக மொத்தம்
90 தினார் வருது பாய்.இப்ப உங்களிடம்
எவ்வளவு பணமிருக்கு..எங்கிட்ட ஐம்பது தினார்தான் இருக்குது..மேலும் நாற்பது தினாருக்கு எங்கே போவேன்..
ஊருக்கு போற டென்சன் பார்சல் அதிகம் இப்படி அந்த கஸ்ட்டமர்..ரொம்ப நொந்து போய் இருந்தார்...ஷாம் வந்து ஒரு ஐடியா சொன்னார்..ஆமா பாய் நீங்க எத்தனை நாள் லீவுல போறீங்க ..
ஒரு மாசம் தான் போறேன்..என்றார் கஸ்ட்டமர் அப்ப இதுல உள்ள பார்சலில் முக்கியமானத மட்டும் எடுங்க என்றான் ஷாம்..ஏன் சார் என்றார்..இல்லை..மீதமுள்ள பார்சல
ஸீ கார்கோவில் போடுங்க..கொஞ்சம் முன் பணம் கொடுங்க ஏர் பார்சலுக்கு மட்டும் முழு தொகையும் கட்டுங்க...என்றான்..எல்லாமே முக்கியமான சாமான்தாங்க...சரி கொஞ்சம் பொறுங்க என் நண்பனிடம் போன் செய்து கேட்குறேன் என்று..பக்கத்து வீட்டு நண்பனிடம் தொடர்பு கொண்டான்...
தொடரும்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக