புதன், 9 பிப்ரவரி, 2022

கார்கோ பிக் அப் -(பார்சல் -11)

இரவு 11-40க்கு எல்லா பார்சல்களையும்
எடுத்து ஹெட் ஆபீஸ்க்கு கிளம்ப ஆயத்தமானார்கள் ..அந்த சமயத்தில்..
குவைத் போலீஸ் உடையில் காரில் வந்து இறங்கிய இரண்டு பேர்..
ஒருவர். ..சோமுவின் பக்கமாகவும்
இன்னொருவர் ஷாமுவின் பக்கமாகவும்
நின்று நாங்க போலீஸ் உங்கள் விசா ஐடி கார் லைசன்ஸ் இவைகளை எடு...
என்றும் இந்த நேரத்துல என்ன பன்றீங்க...யாரு நீங்க
வண்டியில் என்னா இருக்குது ..என்று சோமு பக்கமாக உள்ளவன் கேட்டான்..சோமு சொன்னான் நாங்க கார்கோ கம்பெனியில் வேலை பார்க்கிறோம்..
இதில் இருக்கும் பொருள்கள் யாவும் குவைத்தில்
உழைக்கும் இந்தியர்கள் தன் குடும்பத்திற்கு  பார்சல் அனுப்புவார்கள்..அதை நாங்க எடுத்து போக வந்தோம் என்றான்.
சரி சரி  12 மணி ஆகுதே ..இன்னுமா வேலை முடியவில்லை என்றான் ஒருவன்..
ஆமா சார்..ஒரு கஸ்டமர் நாளை ஊர் போக 
வாங்கிய பொருள்கள் அதிகமானதால்..
மீதமுள்ள பொருள்களை கார்கோவில் போட அழைத்தார்கள் வேறு வழியில்லை..
என்றான் ஷாம்..(இங்கு அரபி மொழி யில் உரையாடல்..புரிதலுக்காகவே தமிழில் )
சரி சரி பணம் பொருள் பத்திரம்..நாங்க போலீஸ் என்று எப்படி நம்புனீர்கள் நாங்க 
போலீஸ் உடையில்...இருப்பதால் மட்டுமா என்றான் மற்றொருவன்..சோமு விடம் கேட்டான்..நம்புவதில் சரியோ தவறோ..
எங்களுக்கு என்ன எழுதி இருக்கும்
அதுதானே நடக்கும்..நீங்கள் யாரு உண்மையான போலீஸா இல்லை வழிப்பறி போலீஸா என்று தெரிவதற்கு எங்களிடம்
வார்த்தையில்லை...ஆனால் நாங்க
ஆபீஸ் திரும்பும் வரை இதிலிருக்கும் பொருள்களுக்கு ..வாகனத்திற்கு பணத்திற்கு நாங்களிருவருமே பொருப்பேற்கனும்..என்றான் ஷாம்.
சரி சரி கவலை வேண்டாம் நீங்க வேறெங்கும் நிற்காமல் நேரா உங்க ஆபீஸ்கு போகவும்.
இப்போதெல்லாம் எங்களைப்போல் பல போலி போலீஸ்கள் உருவாகி வழிப்பறி செய்வதால் நாங்களும் அவர்களைப்போல்
நடமாடுகிறோம்..இதே போல் உங்களிடம் வேறு யாரும்...போலீஸ் என்று வந்தால்..
வாகனத்தை விட்டு இறங்க வேண்டாம்..
நிஜமான போலீஸ் அவசரப்படாமல்..
உங்களை விசாரித்தாலே  புரிந்து  உங்க
ஐடிகளை காட்டுங்கள்..எந்த நிலையிலும்
வேறு வேறு ஐடி வேறு கேள்வி கேட்டால்
அவர்களிடம் கவனமாக இருக்கவும்..உடனே
கார் ஹாரன் அடித்து கொண்டே இருக்கவும்..அக்கம் பக்கம் உள்ளவர்கள்..
வருவதை தெரிந்து கொல்லையர்கள் ஓடி விடுவார்ரகள்..அவர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தால்.
ஒரு சில கொல்லையர்கள்..ஆயுதங்கள் கத்தி ...துப்பாக்கி போன்றவைகளும் இருக்கும்..அதில். ஏமார்ந்தவர்களும் உண்டு..இருந்தாலும்..பார்த்து கவனமாக பயணியுங்கள்..என்று விடைபெற்றனர்..
குவைத் போலீஸ்.
ஒரு வழியாக ஏதோ இருவரின் நல்ல நேரம் வந்த போலீஸ் இருவரும் நல்லவர்களாகவே
வந்து செக் செய்து போனார்கள்.என்று இருவரும் அன்றைய பொழுதை நிறைவு செய்ய கணக்கு முடித்து தங்களது இருப்பிடத்தை நோக்கி நடந்தார்கள்..
போகும் போதே உணவு சமைப்பதற்கான 
எல்லாம் வாங்கி சென்றார்கள்..என்னடா
இரவு 12. மணிக்கு சமையலா...ஆமாங்க
அந்த ஒரு வேலை தான் நாங்க சமைத்த உணவு.மற்ற இரு வேலை உணவு வெளியில் சாப்பிடுவோம்..எனவே அங்கே ரூம் போனார்கள் சமைத்தார்கள்..
சாப்பிட்டார்கள்..
தலைகோத தவமிருக்கும் தலையணையும்..
அள்ளி அணைக்க போர்வையும் ...கண்களுக்கு விருந்தளிக்க
கனவுகளும்  போல்..அந்த கனவோடு கொஞ்சி மகிழ ஓடி உழைத்த தேகம்..ஒய்யார குஷியில் படுக்கறையை
புரட்டி போட்டே புரண்டான் இந்த ஷாம்.
எப்பவும் போல அதிகாலை ஆதவன் வருகை ..விடியலை எழுப்பினான்..ஷாம்
குளித்து முடித்து சோமு வை அழைத்துக்கொண்டு ஹெட் ஆபீஸை நெருங்கையில்..மற்ற டிரைவர் அட்டன்டர் முகமும் ரொம்ப கவலையுடனே காணப்பட்டது..அந்த கவலைக்கு பின்னால் மிகப்பெரிய சம்பவம் நடந்திருக்கு என்றே யூகிக்க முடிகிறது..அப்படி என்ன நடந்திருக்கும் என்று கிட்ட நெருங்கி விசாரிக்கையில்..எல்லாமே வா எல்லாமே வா..எரிந்து சாம்பலாகிவிட்டதா...என்று...
அணல் பறக்க வார்த்தைகள்..
எல்லாம் எரிந்தது ..என்றால் ..என்னவா  இருக்கும்...நாளை பார்ப்போம்..

தொடரும்.....

கார்கோ பிக் அப் -பார்சல் 10

இப்படித்தான் ரெண்டு பொண்டாட்டிக்காரன் வாழ்க்கை கார்கோவையும் விட்டு வைக்கவில்லை...எதோ நாங்க பார்சல் எடுக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களின் இது போன்ற நகைச்சுவையான நிகழ்வுகளும் ஏற்படும்..பார்சல் கிடைக்க தாமதமானதில்
ஆதங்க படும் கஸ்டமர்களை சமாளித்து வெளியில் வருவதற்கு பெரும் சிரமமாகிப்போகும்.
சரி இன்று எத்தனை கஸ்டமர் எத்தனை பில்
வைட் என்ன என்று எல்லாமே கணக்கு பாரு..என்னவென்று தெரியல இந்த மாதம் தேதி 15 கடந்துட்டாலே ஆர்டர் வருவது குறைந்து போய்விடும்.சரியென்று கணக்கு முடித்து ..திரும்ப அழைப்பதற்கு காத்திருந்த வேளையில் ஆர்டர் பாய்..அழைப்பு அலோ சோமு சாரிப்பா..இந்த நம்பர தர மறந்து விட்டேன்..இதை எடுத்துவிட்டு ஆபிஸுக்கு வந்திடு...அண்ணே மணி பத்து ஆகப்போகுது...கஸ்டமர் எடுக்குமா..கோவப்படாது..எதுக்கும் அடித்து பாரு ..எடுத்து பேசிப்பாரு நாளைக்கு வருகிறோம் என்று...ஒத்துக்கிட்டா சரி இல்லையென்றால் போய் எடுங்க..
சரி என்று அந்த கஸ்டமர் நம்பருக்கு அடித்து பார்த்தான் சோமு..அடித்த உடனே அந்த கஸ்டமர் எடுத்து பேசினான்..என்னங்க உங்க கார்கோவில் நாங்க எங்க பார்சல் போட காத்திருக்கனும் என்பது விதி போல..
என்றான் சற்றே சலித்தே..பிறகு ஒரு வழியாக சோமு சமாளித்து சரி அட்ரஸ் சொல்லுங்கண்ணே...என்றதும் அந்த கஸ்டமரும் எவ்வளவு நேரத்துல வருவீங்க
இதோ இப்ப வருவோம் .என்றான் ...
நேரத்தை பார்க்காமல் அந்த கஸ்டமர நெருங்கியதும் .ஆபீஸ் ஆர்டர் பாய் என்னாச்சி ..அந்த நம்பரு பேசியாச்சா..
ஆ..ஆ..பேசியாச்சி..
அப்படியா சரி அப்ப இந்த நம்பரையும் செக் பண்ணு ரெண்டும் ஒரே கஸ்ட்டமரா..என்று
அதே ஏரியா தான்.என்று நம்பர கொடுத்துட்டு போஃனை வச்சாச்சு..
சோமு ..சற்று சினுங்களுடன்..ஷாம் இடம்
சொன்னான்..அண்ணே என்றைக்கு பத்துமணிக்கு கணக்கு முடிக்கிறமோ 
அன்று இரவு 11 அல்லது 12 மணி ஆகிவிடுகிறது..என்றான்.சரி சரி அடுத்த நம்பர அடுத்து பேசு அட்ரஸ வாங்கு...என்றான் ஷாம்...உடனே அந்த நம்பருக்கும் போன் அடித்து பார்த்தான் அந்த நம்பரும் எடுத்து பேசினார்கள் .என்னப்பா இந்த நேரத்துல அடிக்கிறீங்க..நேரம் பத்து இருபதாகி விட்டது...எப்ப வந்து சேர்வீங்க..அட்ரஸ் சொல்லுங்க உங்க ஏரியாவுக்கும் அடுத்த தெருதான் முடித்து விட்டு வருகிறோம்.
அப்படியா நான் நீங்க வரமாட்டீங்க காலையில வருவீங்க என்று எண்ணினேன்
பரவாயில்லை இந்த நேரத்துலையும் வந்து பார்சல் எடுக்குறீங்க..என்று அட்ரஸ் சொன்னார் அந்த கஸ்டமர்.
முதலில் அந்த கஸ்டமர முடித்து விட்டு பிறகு இந்த கஸ்டமர பார்ப்போம் என்று கிளம்பினர்.
கொஞ்ச நேரத்தில் முதலாவதாக அந்த கஸ்டமர அழைத்து கார்கோ பார்சலை எடுத்து பில் எல்லாம் போட்டு விடைபெற்றார்கள்..பிறகு இரண்டாவதாக உள்ள கஸ்டமர அடைந்து பார்ரசல எடுக்கும் போதே அந்த கஸ்டமர் குறுக்கிட்டு ..பாய்..
உங்க கார்கோவில் விலை அதிகம். ஆனால் டெலிவெரி விரைவாகவும் ..பொருள்கள் ரொம்ப சேஃபாகவும் கிடைக்குதென கேள்வி பட்டிருக்கிறேன்..முன்பு வேறு கார்கோவில் விலை குறைவு டேக்ஸ் பேக்கிங் இதெல்லாம் இல்லை என்று
ஒரு கிலோவுக்கு இவ்வளவு குறைவாக இருக்கும் என்று அந்த கார்கோவில் ஏர் பார்சல் 100 கிலோ போட்டேன் 4 பார்சல்
அதில் ஒரு பார்சல் கூட கிடைக்கவில்லை..
நானும் என் அரபியை கூடவைத்து அந்த கார்கோ ஆபீஸ்க்கு போய் பார்த்தால் அந்த ஆபீஸ் பூட்டி கிடக்குது..பிறகு என் பொருளும் போய்..அனுப்பிய பணமும் போய் ஏமார்ந்ததுதான் மிச்சம்..என்று
சொல்லி முடித்தார்..பாய் எங்க கம்பெனி கிலோவிற்கு அதிகம் வாங்குவது எல்லாம்.
ஒரு கம்பெனியின் உண்மை.நேர்மையை 
நிரூபிப்பதே...மேலும் நாங்கள் நீங்கள் தரும் பொருளுக்கு பாதுகாப்பாகவும் விரைவாகவும் கிடைக்கவே சில பல  கார்கோ விமான நிறுவனங்களை  நேரடியாக அனுகி ..பார்சல் அனுப்புவதற்கான சலுகைகளை பெற்று
எந்த தாமதமுமின்றி எடுத்து செல்ல ஏற்பாடு செய்திருக்கிறோம். இதே போல் இந்தியவிலும் எந்த எந்த மாநிலங்களுக்கு பார்சல் போகனுமோ அந்த மாநிலங்களை வடக்கு தெற்கு என்று பிரித்த அந்தந்த மாநிலங்களில் உங்கள் கம்பெனி ஆட்களை  நிறுத்தி .வருகிற பார்சல்களை அட்ரஸ் வாரியாக.சரியசெய்து டெலிவெரி செய்கிறோம்..பொருள்களை எடுக்கும் போதும் கொடுக்கும் போதும் எடை போட்டி கொடுக்கிறோம் ..அந்த தருணத்தில் எடை குறைந்தால் அதற்கான காரணம் தெரிந்து கம்பெனியின் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த கம்பெனி இருபது வருடத்தை கடந்து பெரும்பான்மையான உங்களை போன்ற வாடிக்கையாளர்களையும் சம்பாரித்து வகத்திருக்கு..என்றான்..சோமு.
அப்படியா பாய் ரொம்ப சந.தோசம் இந்த பார்சல் சரியாக கிடைத்து விட்டால் நான் இனி இங்குதான் பார்சல் போடுவேன் நான்
எல்லா மாதமும் எப்படியாவது எதையாவது பார்சல் போட்டுக்கொண்டே இருப்பேன்.. இதோ இன்னும் சில நாட்களில் ஊருக்கு போகிறேன் என்றார் அந்த கஸ்டமர்..அப்படியா டிக்கட் எடுத்தாச்சா..இன்னும் இல்ல ..அப்படியென்றாரல் நம்ம கம்பெனியில ட்ராவல்ஸ்ம் இருக்கு டிக்கட்டும் எடுக்கலாம்..ரொம்ப சந்தோசம்
நானும் அரபியும் தான் டிக்கட் எடுக்க போவோம் அப்ப என் அரபியை கூட்டிக்கொண்டு உங்க கம்பெனியிலே எடுக்கிறேன்.சரி என்று பார்சல் எல்லாம் எடுத்து பில் பணம் முடித்து கடைசி ஆர்டருடன் பிக்அப் ஹெட்ஆபீஸ்க்கு புறப்பட்டது.
அப்போது நேரம் இரவு 11-40

தொடரும்......

கார்கோ பிக்அப்-9

சோமு -ஷாம் இருவரும் அந்த பெரியவரிடம்..ஏன் பாய்..இன்னும்..எத்தனை ஆண்டுகாலம் இப்படி இங்கே இருந்து ..உழைப்பு என்று ..
வாழ்வின் கடைசி காலத்தை இருக்கின்ற வரை ஊர் போய் செட்டிலாக வேண்டியதுதானே..என்றார்கள்.

அதற்கு அந்த பெரியவர்..நான் ஊர் போய்
செட்டிலாவது பெரிய விசயமில்லை..இதுவரை நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்க உறவுகள் இருந்தும் ..கண்டுக்காமல் போனவர்கள்..நான்
வெளிநாட்டு வாழ்க்கையை முடித்து விட்டு
போனால் பெட்டி வாசம் உள்ள வரை ஒட்டி இருப்பார்கள்..வாசங்கள் போன பின்னே அந்த உறவுகளும் போய்விடுவார்கள்.
பிறகு என் பேத்திக்கு செய்ய வேண்டியதை தடுக்கவே நேரிடும்..அதுவும் இல்லாமல் எனக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்து அவ்வபோது சிகிச்சையை மேற்கொள்கிறேன்..இந்த அரபுதேசத்தில்
எத்தனையோ மனிதர்கள் ரத்தத்தை வியர்வையாக்கி குடும்பம் உறவு என்று தனக்கென்று இல்லாமல்..கூட பிறந்த பிறப்பு..தாய் தந்தை ஆகியோர்களின்
நல் வாழ்வுக்கு பணத்தை அனுப்பி வாழ்கின்றனர் .பின்பு அவர்களுக்கென்று சேர்த்து வாழ்வதற்கு வயது போகிவிடுகிறது...
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் ..மனசுல வச்சிக்கிங்கோ.. உங்க வாழ்வுக்கும் தனியாக ஒரு பங்கை சம்பளத்திலிருந்து சேமிக்க ஆரம்பிக்கவும் என்றார்..பணம் இருந்தால் தான் இந்த உலகம் உங்களை மதிக்கும்...அது போல் உங்க உழைப்பை உண்மையாகவும் நேர்மையாகவும் சம்பாரித்து கொள்ளுங்கள்...மது ..மாது சூது ..பாக்கு.. போன்ற தீய செயல்களில் எந்த நிலையிலும் நெருங்காதீர்கள்.. இளமை உங்களை போதைக்கான பாதையை இலகுவாக காட்டும்...அதில் மயங்கி..உங்கள் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள் பின்பு நீங்கள் எதிர் கொள்ளும்   தருவாயில் .நீங்கள் மிகவும் சிரமப்படுவீர்கள்.என்றார்..நான் மரணத்தை
விரும்புகிறேன்..ஆனால் அதற்குள் என் பேத்திக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து வைத்து நிம்மதியாக கண்ணை மூடனும்..என்றார்..எங்களுக்கு அந்த பெரியவரின் வார்த்தை ஒவ்வொன்றும் கேட்க கேட்க ஆச்சர்யமாகவும் மனதை
தட்டி எழுப்பும் விசயமாகவும் இருந்தது.

பிறகு அந்த பெரியவரிடம் விடை பெற்று
அடுத்த பார்சலை எடுக்க போகும் போது
ஹெட் ஆபீஸ்ல இருந்து போன்..

பில் போடும் போது அட்ரஸ் மொபைல் நம்பர் இவைகளை தெளிவாக எழுதுங்க..
முக்கியமாக போஸ்ட் ஆபீஸ் பின்கோடு தெளிவான எழுதங்க..

கஸ்ட்டமர் அனுப்பும் பொருள்களை என்ன என்ன இருக்கு ..என்று ஒன்றுக்கு மறுமுறை கேட்டுக்கொள்ளுங்க...இங்கே ஒரு கஸ்டமர்
பொருள காணோம் என்று வந்து நிக்குது..
பில்லுல பார்த்தால் எழுதி இல்லை..
ஆனால் இந்த கஸ்டமர் நான் சொன்னேன் என்று செல்லுது...பிறகு இன்னொரு விசயம். பார்சல் பொட்டியில்  மாநிலங்களை எழுதும் போது கவனமாக எழுதுங்க..பிறகு
அது மாநிலம் விட்டு மாநிலம் மாறிப்போக வாய்ப்பாக போய்விடும்.
சரி என்று விடைபெற்று போனை வைத்தார்கள்..மீண்டும்..போன் வந்தது
உடனே எடுத்தான் ஷாம்...அலோ 
கஸ்டமர் என்ன ஜி நான் தான் படிச்சி படிச்சி சொன்னேன் ல..
எனக்கு ரெண்டு வீடு ஆனால் ஒரே அட்ரஸ்
கீழ ஒரு வீடும் மேல ஒரு வீடும்..தனி தனியாக பார்சல் போட்டேன் கீழ. வீடுக்கு போய்விட்டது..மேல் வீட்டுக்கு ஏன் போகவில்லை என்றான் அந்த கஸ்டமர்
அப்படியா ரெண்டும் ஒரே நாளில் தானே அனுப்புனோம் அது எப்படி ஒன்றும்..மட்டும்
டெலிவெரி ஆகியிருக்கும் என்று..அப்படியே போனை துண்டித்து விட்டு கம்பெனி க்கு பின் அடித்து. விவறத்தை சொன்னான் ஷாம்..உடனே ஆபீஸ் பையன் அந்த கஸ்டமர் பில் நம்பரை அடித்து செக் செய்தால் அந்த அட்ரஸ்ல இரண்டு பார்சலுமே டெலிவெரி ஆகியிருக்கு என்று அதை அப்படியே. மொபைல் கேமாரவில் போட்டோ எடுத்து அனுப்பி வைத்தான் ஆபீஸ் பையன்....வந்த வாட்சப் மெஸ்ஸேஜ
ஓப்பன் செய்து பார்த்து அதை அப்படியே
அந்த கஸ்டமர் நம்பருக்கு அனுப்பி வைத்தான்..,கஸ்டமர் வாட்சப்ப பார்த்து வியந்து போனான் இரண்டு கிடைத்ததற்கான பேப்பர்ல இவ கையெழுத்து போட்டு இருக்குறா..
சரிங்க பாய்..நான் என் வீட்டுக்கு போன் அடித்து பேசி உங்களை தொடர்பு கொள்கிறேன் என்றவுடன் வீட்முக்கு போன் அடித்து தன் மனைவியிடம் கேட்டான்...உண்மையை சொல்லு
பார்சல் இரண்டு வந்ததா ஒன்று வந்ததா..
இரண்டு வந்தது..இரண்டுமே சரிசமமா இருக்குது..ஏன் என்ன விசயம்...அடியே இவளே இரண்டுமே உனக்கென எண்ணமோ கொண்டுபுடுவேன்..போய் மேல் வீட்டு  பார்சல கொடு.என்றான்..
அந்த சக்களத்திக்கு மட்டும் அதிக எடை ..எங்களுக்கு எடை கம்மியா இருக்குது
அது என்ன அவளுக்கு மட்டும் பொருள் அதிகம்..எனக்கு மட்டும் ஒரு வைட்டு இல்லாமல்..ஏதோ பேருக்கு அனுப்பனும் என்ற கடமைக்கு ...சரி எங்க சுத்துனாலும்
கீழிருந்துதானே மேலபோவ....
வாடி மவனே உனக்கு கச்சேரி இருக்கு...

தொடரும்....

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

கார்கோ பிக் அப் -பார்சல் 8

கார்கோ பிக் அப் -8
----------------
இரண்டு அரபி பசங்க கார்கோ வாகனத்தை நோக்கி வந்ததும் ..எதிர்பாரமல் வந்த அந்த வாகனத்திற்கு வழி விட்டு முன்னோக்கி சென்றான் ஷாம்...
இந்த மாதிரி செய்வது அரபிக்கார பசங்கள் மட்டுமல்ல மற்ற அரேபிய தேசத்து பசங்க அதாவது சிரியா -எஜிப்து ..போன்ற நாடுகளைச் சேர்ந்த பசங்களும் இப்படி சேட்டை பண்ணுவாங்க..
ஒரு வழியாக சுதாரித்தவுடன்
வாகனத்தை வேறு கஸ்டமர் அட்ரஸுக்கு சென்றார்கள் ஷாம் -சோமு..

அங்கே பார்சல் போட ஒரு வயதான முதியோர் வயது ஐம்பதை கடந்திருக்கும்..
வாங்கப்பா..வாங்க..நான்தான் பார்சல் போடனும் ..என்று உள்ளே அழைத்து சென்றார்..சோமு ஷாம் இருவரும்..உள்ளே
போய் பர்சல் எல்லாம் வைட் போட்டு பில் போட்டு அட்ரஸ் கேட்கையில்..அந்த அட்ரஸ்
ஒரு ஹாஸ்டல் ..ஆமாம் அது அவருடைய பேத்தி படித்து கொண்டிருக்கிறாள்..
அதை சற்று எதிர்பாரமல் ஷாம் ..ஏன் பெரியவரே இதெல்லாம் ஒரே அட்ரஸ்க்கா..ஆமாம்..என்றார் அந்த பெரியவர்..ஏன் உங்கள்  மனைவி மக்கள் இவர்களுக்கு அனுப்பவில்லையா..என்று சோமு இடையில் கேட்டான்...உடனே அந்த பெரியவர் முகம் சோகமாகியது..எல்லாம்
இருந்தாங்க..இப்ப இல்லப்பா...

எங்களுக்கு ஒரே மகள் அவளுக்கும் நல்ல இடத்திலதான் இதோ இந்த வீட்டிலேயே வேலை பார்த்து ..இந்த அரபியும் என் மகளுக்கு தேவையான நகைகள் வாங்கி கொடுத்தாள்..நல்ல அரபி நான் இங்கு முப்பது வருடமா இந்த ஒரே வீட்டில்  தான் வேலை செய்கிறேன் அந்த ஒரு காரணத்திற்கு எனக்கு நல்ல மரியாதை ...நான் முதல் முறை வரும்போது என் கிழவன் பிள்ளைகள் ரொம்ப சிறிய வயசு இப்ப அதுதது பெரிய பிள்ளைங்களாகி விட்டது..அப்படியே காலம் போனது ..
என் மகளுக்கு மணமுடித்து கொடுத்தேன்
அதுவும் நல்லா வாழ்ந்தது..நாங்களும் நல்லா சந்தோசமா இருந்தோம் ..மகள் கடைமையை நிறைவேற்றி விட்டோம்
மகளுக்கும் ஒரு பெண்குழந்தையும் பிறந்தது அது வளர்ந்து ஐந்து வயதை கடந்த சமயம் மகள் மாமியார் வீட்டுக்கு சென்று அங்கும் இங்குமாக வரப்போக இருந்தது..பிறகு மகளின் மாமியாருக்கு உடல் நிலை மோசமாக தொடங்கியது ..இதனால் தனது தாய் வீட்டுக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது..பிறகு என்  மனைவிக்கும் துணைக்கு ஆள் வேண்டுமென்று இந்த அரபுதேச வாழ்க்கையை முடித்துவிட்டு செல்வோம்
என்று கிளம்பினேன்...அப்போது இந்த அரபி என்னை விடுவதற்கு மனமில்லை..
வேண்டுமென்றால் உன் மனைவியை இங்கு தருவிப்போம் ..இங்கு உனக்கு தனியாக தங்கும் வசதியை ஏற்படுத்துகிறேன் என்று..சொன்னான்..
நான் முடியாது அது சரிபட்டு வராது..என்று
கிளம்ப ஆயத்தமானேன்..கடைசி கட்டமாக என் அரபி குடும்பம் யாவுமே என்னை வழியனுப்பி வைத்தது ..நானும் கிளம்பினேன் ..அப்போது என் கிழவன்-கிழவி சொன்ன வார்த்தை சேகர்  நீ எப்படி வேண்டுமானாலும் இங்கு வர நாங்க விசா அனுப்ப தயார்..என்று சொன்னார்கள்..சரியென்று நானும் கிளம்பி வந்தேன்..எப்படியும் போய் ஒரு வருசம் நிறைவேறியிருக்காது..என் மகள் என்னை
பார்க்க வந்து என்னோடு ஓரிரு நாட்கள்
தங்கியிருப்பாள்..அவ்ள மகள் என்மீது அதிகப்பிரியம் தாத்தா தாத்தா என்று என்னை விட்டு பிரிய மாட்டாள்..ஒரு நாள் என் மனைவியும் மகளும் ..(மகள் ஸ்கூட்டி ஓட்டுவாள்)ஸ்கூட்டியில் போகும்போது எதிரே வந்த லாரியின் அதிவேகம் கட்டுப்பாடை இழந்து எதிரே வந்த அத்துனை வாகனங்களையும் இடித்துதள்ளியது அதில் முதலாவதாக  வீசப்பட்டது என் மனைவி மகள் இருவருடைய உடலும்தான்..ஏதோ என் பேத்தி என்னோடு இருந்ததால் அவள் உயிர் 
என் கையிலே...உயிரோடு ஒன்றாய் போனவர்கள் ..ஒன்றாக சடலமாக திரும்பியது ..அந்த ஏரியாவே கண்ணீரில் மூழ்கியது..பிறகு அதற்கான கடமைகள் எல்லாம்..முடிந்த பிறகு என்மருமகனிடம் கேட்டேன் என் உசுருங்க இரண்டுமே என்னை விட்டு போய்விட்டார்கள்..இருப்பது இந்த ஒரு உசுருதான்..இந்த பேத்தியை என் கண்ணுள்ள வரை நான் வளர்த்து வருகிறேன் என்று கேட்டதும்..அந்த மனுசன் நல்லது மாமா மகள் உங்க கிட்டயே இருக்கட்டும் என்றார்..உடனே நான் என் பேத்திக்காக வாழனும் என் பேத்தியும் நல்லபடியாக வாழனும் ஆதலால்..என் பேத்தியை ஒரு ஹாஸ்ட்டலில் படிக்க வைக்கப்போகிறேன் என்றார்..உடனே
மருமகன் குறுக்கிட்டு ஏன் மாமா அதுதான் எங்க வீடு இருக்குதே..ஏன் ஹாஸ்டல் என்றார்..இல்லப்பா அவ உங்க வீட்டில் இருந்தாலும் எங்க வீட்டில் இருந்தாலும்...
இருவரின் இழப்பு பெரும் சோகத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும்.அவ சுதந்திரப் பறவையாய் வாழட்டும் என்னடா ஹஸ்ட்டலில் சுதந்திரமா என்று கேட்க வேண்டாம்..கிடைக்கும் அதற்கு அங்கு வாய்ப்பு இல்லை அதாவது ஹாஸ்டல் பிரச்சனைகளைத்தான்..அப்படி ஏற்படாத வாறு செய்ய அங்கு பணிபுரியும் ஆசிரியர் எனக்கு தெரிந்த பால்ய நண்பரின் மகன் தான் ஆதலால் அங்கு என் பேத்திக்கு நல்ல பாதுகாப்பான வசதி சிறப்பான படிப்பு போன்றவற்றை நல்லாவே அமையும்.என்று
என் பேத்திய சேர்த்து விட்டேன் ..பிறகு என்  பழைய அரபிக்கிட்ட பேசினேன் அவர்களும் விசா அனுப்பி விட்டார்கள்..அதற்கு பிறகு இங்கு தான் என் பிழைப்பு..
இதெல்லாம் என் பேத்திக்குத்தான்..என் பேத்திக்கு அனுப்பி பொருள்கள் பார்சல் இதுவரை நல்லடபடியாக எந்த மிஸ்ஸிங்கும் இல்லாம கிடைத்தது இடையில் கூட கடைசியா அனுப்புன பார்சல் ரொம்ப டேமாஜ் என்று சொன்னாள்  என் பேத்தி காரணம் ..நான் ஷாம்பு பாட்டிலை சரியாக டேப் அடிக்காம போட்டுவிட்டேன் அதனால் தான்.ஆனா இதுக்கு முன்பாகவே நான்
பத்து பண்ணிரெண்டு வருசமா உங்க கார்கோ கம்பெனில தான் இதுவரை பார்சல் அனுப்புறேன்..என்று சொல்லி முடித்தார்..
ஷாம்-சோமு ஏன் பாய் இன்னும் எத்தனை வருசம் இப்படி உங்களுக்கு வயசு இப்படி அதிகமாகி விட்டது..என்றார்கள்..அதற்கு 
அவர் சொன்ன பதில் தான் ..எங்க நெஞ்சை 
கொஞ்சம் குமுற வைத்தது...அப்படி என்ன சொல்லி இருப்பார்...

தொடரும்..

புதன், 2 பிப்ரவரி, 2022

கார்கோ பிக் அப் --7

கார்கோ பிக் அப் -7
--------
சோமுவின் பதற்றத்தைக் கண்டு ஷாம் கிட்டே வந்து  அந்த போனை வாங்கி 
பேசினான்..அதே அவனுடைய அம்மாவின்
குரல்..தம்பி ..மாப்பிளைக்கு காலில்
எழும்புகள் முழவதுமாக நசுங்கி போய்விட்டதாம்..ஆதலால் அந்த காலில் அடிபட்ட இடத்திலிருந்து துண்டிக்கனும் 
என்று சொல்லிவிட்டாங்கப்ப..எனக்கு என்னா  செய்வதென புரியலப்பா..
சரி சரி..அழாதம்மா...
என்ன செய்றது..ஆகவேண்டியதை பார்ப்போம்..என்றவன்.உடனே அம்மாவின்.
தொடர்பிலிருந்து விடுபட்டு...தனது
கம்பெனி முதலாளிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னான்..அப்படியே அட்வான்ஸாக பணம் தேவை என்றான்..எவ்வளவு வேண்டும் என்றார் ..அப்படியா..சரி நீ போய் மேனேஜர பாரு நான். .கொடுக்க சொல்றேன்..என்றார் முதலாளியும்.
ஒரு வழியாக அவன் தன் தங்கையின் கனவர் வைத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்..அப்படியே  அந்த 45 தினார்
பணத்தை வாங்க காத்திருந்த வீட்டில்.அந்த
நண்பர் பணத்தை வந்து கொடுத்தார்.
ஒரு வழியாக அந்த 45 தினார் பிரச்சனையும் முடிந்தது..சோமு..ஷாம் இடம் வந்து அண்ணே முதலாளிட்ட பேசியது ஓக்கே ஆகிவிட்டா..ம் ஆகிவிட்டது என்றான் ஷாம்.. உண்மையில்  நம்ம முதலாளி தங்கம்ன....ஆமாடா..நான் கேட்ட தொகை
ஊரு காசுக்கு ஒரு லட்சம்..அதற்கு எந்த
மறுப்பும் இல்லாமல் உடனே வாங்கிக்கோ என்றது..மிகப்பெரிய விசயம்.டா..

சரி அடுத்த கஸ்ட்டமருக்கு கால் பண்ணு..
சோமு போன் போட்டு அட்ரஸ் எல்லாம்..வாங்கினான்..சரியாக அந்த அட்ரஸ்க்கு போய் நின்றார்கள்.
சோமு -ஷாம்..கொஞ்ச நேரத்தில் கஸ்ட்டமர் வந்தார்..வந்தவுடன் சோமு.. எங்கன்னே பார்சல் ரெடியா இருக்கும் என்றான்..உடனே
அந்த கஸ்ட்டமர் ..இந்தா இந்த பில்லுக்கு 
பதில் சொல்லு ..என்று ஆக்ரோசமாக சோமுவின் மூஞ்சுல அவன் ஒரு பில்ல வீசியதும் ஆடி போய்ட்டான்..சோமு.
பாய்...என்ன பார்சல் போடத்தானே போன் பண்ணுனீங்க..இப்ப இருந்துட்டு பில்ல தூக்கி வீசி பதில் சொல்லுங்குற..
என்னா..? என்ன உன் பிரச்சனை அதை சொல்லு...
நாங்க கஸ்ட்டப்பட்டு பொருள் வாங்கி பார்சல் போட்டு அதுல உங்க கைவரிசை காட்டுறீங்களோ ..என்றான் கஸ்ட்டமர்
அலோ அலோ ஏங்க இப்படி கோபப்படுறீங்க
விசயத்தை சொல்லுங்க ஜி.
இந்த பிரச்சனயை கண்டு ஷாம் வண்டிய விட்டு இறங்கி வந்தான்...
பையா பையா என்ன பிரச்சனை உனக்கு
சொல்லு 
ஜி...இந்த மாசம் தான் இந்த பார்சல் அனுப்புனேன்...அதுவும் நீங்க சொன்ன நாட்களை விட..சீக்கிரமாகவே கிடைத்து விட்டது..அத பிரித்து பார்த்தால்..எங்க அம்மாவுக்கும் மனைவிக்கும் துணிமனிகள் அனுப்புனேன்..என் மனைவி துணிமனி இருக்கும் ..என் அம்மாவின் துணிமனி இல்ல..அது எப்படி மிஸ்ஸானது..நீங்கதானே எடுத்துருக்குறீங்க...என்றான் கஸ்ட்டமர்
உடனே அந்த பில்நம்பர பார்த்து ஷாம் 
தனது ஹெட்ஆபிஸ்க்கு போன் போட்டு
இந்த நம்பர்ல பார்சல் வைட் எவ்வளவு டெலிவெரி ஆகிருக்கு என்று விவரத்தை சொல்லுங்க என்றான்..ஆபீஸ்ல.உள்ள பையன்.
உடனே கஸ்ட்டமரிடம் ஷாம் போனைக் கொடுத்தான்...அலோ பாய்..உங்க வீட்ல பார்சல வைட் போட்டு செக்செய்துதானே கையெழுத்து போட்டு வாங்குனாங்க..ஆமாம் என்றான்..கஸ்டமர்
அப்ப உங்க அம்மாட துணமனியை நாங்க எடுத்திருந்தால் அதில் வைட் குறைந்தருக்கனுமா என்ன..? ஆமாம் அப்படி என்றால் உங்க வீட்டில் உள்ளவங்க யாரோ தான் எடுத்துருக்கனும் என்றான்..அந்த ஆபீஸ் பையன்..
என்ன பாய் நீங்க எங்க வீட்டு பொருளை நாங்க ஏன் திருட பொறோம் என்றார் கஸ்டமர் உண்மை தான் ஒரு வேளை உங்க மனைவியிடமே மீண்டும் கேளுங்க...என்றான்..அந்த ஆபீஸ் பையன்
உடனே அந்த கஸ்டமருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உடனே அவன் தன் அம்மாவிற்கு போன் போட்டான்..உடனே அம்மாவும் எடுத்தாங்க..ஏம்மா..நல்லா இருக்குறியா..என்றான்..நான் நல்லா இருந்தா உனக்கென்ன உனக்கு உன் பொண்டாட்டிக்கும் உன் மாமியாக்கும்
கார்கோ அனுப்ப முடியாது .எனக்கு ஒரு  துணிமனி அனுப்ப முடியலையில..அதுதான் நான் உங்கூட பேசும் போது சண்டை போட்டேன்.
இல்லை.அம்மா...அது அது கொஞ்ச நேரம்
அவளிடம் கொடுங்களேன் என்றான் .தன் மனைவியைத்தான்...உடனே அம்மா தன் மருமகளிடம் போனைக் கொடுத்தது..
மனைவி வாங்கி பேசினாள்..
அலோ என்றவுடன் ஆமாம் நேத்து கார்கோ வந்ததுல ஆமாங்க அந்த பார்சல வைட் போட்டுத்தானே பார்சலுக்கு கையெழுத்து போட்டி ஆமாங்க..பிறகு எப்படிடி பார்சல் வைட் குறையும் எங்க அம்மா துணிமனி மட்டும்  என்றான் ஆவேசமாக..ஆமாங்க ..என்று தடுமாறினாள்...கஸ்டம்மர் ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு
பார்சல் வந்ததா இல்லையா..வந்துச்சி அதை எங்க அம்மாக்கு எடுத்துக்கிட்டேன்
என்றாள்..அப்படியேஇரு உன்ன அப்புறமா  வந்து கவனிச்சிக்கிறேன்...
கஸ்டமர் கார்கோ தலமை அபீஸரிடம் மண்ணிச்சிடுங்க தவற எங்க பக்கம் தான்
நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன் என்று போனை துண்டித்தார் கஸ்டமர்.

ஷாம் உடனே அண்ணே உங்களுக்கு இந்தமாதிரி பிரச்சனை வந்தாநேராக 
நீங்க எங்க தலைமை அலுவலகத்திற்கு
தெளிவுபடுத்திருக்கலாம்.என்று ஷாம் சோமு அந்த கஸ்டமரிடம் இருந்து விடைபெற்று நகர்ந்தார்கள்.

நகரும் போது குறுக்கே இரண்டு  அரபி பசங்க வேகமாக மோதுவதுபோல் வாகனத்தை ஓட்டி வந்தார்கள்..சற்றும்
எதிர்பாராமல் ஷாம் கொஞ்சம்......


தொடரும்..

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

கார்கோ பிக் அப்-பார்சல் -6

கார்கோ பிக் அப் -பார்சல் 6 
-----------------------------------------------
தினமொரு முகவரியில்
என் பிழைப்பு ஆனதடி,
மனமொரு முகம்தேடி
ரணமாகி போகுமடி.

கணப்பொழுது வாகனச்சூடு
கொதித்தே வரும் சிறுநீரும்,
வெப்பச்சூட்டில் நாலுகாசு
வியற்வை மழையில் தேகமடி.

தாகமெடுக்கும் நீருமிருக்கும்
அருந்த நேரமிருக்காது,
பசியெடுக்கும்  உணவுமிருக்கும்

உண்ண வாய்ப்பு கிடைக்காது.
எனக்காக எங்கோ நீ
பிறந்து விட்டாய்,
அதற்காக ..ஒத்திகையை
கவிதையில் நடத்துகிறேன்.

                    ஷாம்...மொபைலில் டைப் அடிக்கும் போது சோமு கவனித்து விட்டான்..அண்ணே என்னா....!வரிகள் செமையா இருக்கு..யாருக்குண்ணே என்னா ...இப்படி எழுதி இருக்குறீங்க..?

  எல்லாம் எனக்காக பிறந்தவளுக்கு ..நான். கவிதை எழுதினா எப்படி இருக்கும் என்று சும்மா எழுதி பார்த்தேன்..என்றான் ஷாம்...

ஏன் அண்ணே நீங்க யாரையாவது
காதலித்தது உண்டா...அதெல்லாம் இல்லடா..அப்படி காதலித்திருந்தா
நான் ஏன் இந்த மாதிரி எழுத போகிறேன்..இப்ப நான் எழுதி இருப்பது

என் எதிர்கால உயிருக்கு...ஓர் சரிதை.
சரிசரி...வாங்க அந்த 45 தினார் பார்ட்டிக்கு போன் பண்ணுவோம்...என்றான் சோமு..

மறுபடியும் அந்த நண்பருக்கு தொடர்பு கொள்வதற்கான போன் அடித்தான்..சோமு

அலோ ..யாரு.....
நான்...தான் கொஞ்ச முன்னாடி உங்க நண்பருடைய பார்சல் எடுக்க வந்த ஆட்கள்..

ஆமாம்....சொல்லுங்க...என்ன விசயம்..
இல்லை அவர் பார்சல் அனுப்புனதற்கு
காசு வாங்காமலே போய்விட்டோம்...
பிறகு அவருக்கு அடித்து கோட்கையில் அந்த காசு உங்களிடம் தான் கொடுத்தாராம்..என்றான் சோமு..
ஆமா...அத நானும் மறந்தே விட்டேன்..இருங்க மணி பர்ச ரூம்ல வச்சிறுக்கேன்...இதோ எடுத்துட்டு வருகிறேன்...என்று உள்ளே போனார் அந்த நணபர்...அப்போது காத்திருந்த தருணம்..
அந்த வீட்டில் வேலை செய்யும்...பெண்மனி
வெளியே குப்பையை போட வந்ததை
சோமு கவனித்து விட்டான்..
அந்த பெண்ணும் இவனை கவனித்து...
சோமுவை நெறுங்கியபடி அருகில் வந்து
நீங்க தமிழா ஆமாம்...நானும் தமிழ் தான் இது உங்க கார்கோ வண்டியா ...ஆமாம்....
கிலோவுக்கு எவ்வளவு..ஏர் கார்கோ எத்தனை..நாளில் ஸீ கார்கோ எத்தனை..நாளில் கிடைக்கும்..பெண்மனி 
கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லிவிட்டு..
தன் கம்பெனி கார்டில். அவன் ஆர்டருக்காக வைத்திருக்கும் மொபைல் நம்பரையும் எழுதி கொடுத்தான்...பார்சல் ரெடி பண்ணி
போன் பண்ணுங்க...வேறேதும் சந்தேகம் இருந்தால்..இதுதான் என் நம்பர்..தொடர்பு கொள்ளுங்கள்..சரியா என்று பேசி முடித்தவுடன்.. மீண்டும் சோமுவின் போன் ரிங்டோன்..ஊ சொல்றியா..மாமா ஊஊ சொல்றியா மாமா...ரிங்டோனை கேட்டவுடனே..அருகில் இருந்த அந்த பெண்..சோமுவை பார்த்து நாணத்துடன்
புன்னகைத்ததை கவனித்துவிட்டான்..
பிறகு  போனை எடுத்து பார்த்த போது..
ஷாம்...அம்மாவின் நம்பர்...உடனே எடுத்து பேசினான்....அலோ...என்றவனின் முகம்
பதறியது...ஏன் ஏம்மா அழகுறீங்க..என்ன விசயம்..விசயத்தை சொல்லுங்க...என்றான்..இருந்தாலும் அந்த அம்மாவின் அழுகுரல் ஓயவில்லை..
ஏன் இந்த அழுகுரல்...என்ற காரணத்தோடு..
மீண்டும் கேட்டான் அப்படி அழக் காரணம் என்னவா  இருக்கும்..நாளை பார்ப்போம்..
அதுவரை ...உங்களிடம் ஓர் தற்காலிக
ப்ரேக்டைம்...
தொடரும்.

திங்கள், 31 ஜனவரி, 2022

கார்கோ பிக்அப்-பார்சல்-5

கார்கோ பிக் அப்-பார்சல் -5
----------------------
ஷாம் அப்படியே அவர்கள் இருவரும்
பேசிக் கொண்டிருப்பதை கவனித்து கண்டுக்காமல் நகர்ந்தான்.

சரி வாங்க பாய்...வந்து அட்ரஸ் சொல்லுங்க ..யார் பெயருக்கு அனுப்புறீங்க..என்றதும் எல்லாம் சொன்னார்...
இந்த பார்சலில் என்ன என்ன இருக்கு சொல்லுங்க...எலக்கட்ரிக்கல் எலக்ட்ரானிக் ..பாடிஸ்ப்ரே..குவைத் பால் டப்பா..இவைகள் ஏர் கார்கோவில் அனுப்ப தடையுள்ளது..போன்வகையாறா எல்லாம் அனுப்பவதற்கு தடை....என்று சோமு சொல்லவும்..

அதெல்லாம் உங்க ஆபிஸ்ல சொல்லிவிட்டார்கள்...அதெல்லாம் என்
லக்கேஜ்ல எடுத்துட்டு போகிறேன்.
என்று எல்லாம் சரி பார்த்து கையெழுத்து போடுங்க என்றான் சோமு

சொன்ன முக்கியமான தகவல்..யார் இந்த பொருளை வாங்குவதோ அவர்களுடைய ஆதார் கார்டு காப்பி

உங்களுடைய குவைத் சிவில் ஐடி காப்பி
இவைகளை இப்ப நான். பேசின வாட்சப் நம்பருக்கு அனுப்பவும்.


ஏன் பாய்..அதெல்லாம் கேட்குறீங்க..
ஆதார் கார்டு ஏன் உங்களுக்கு..என்றார்
கஸ்டமர்..
அது எங்களுக்கில்லைங்க இந்திய
கவர்மெண்ட்  ஏர்போர்ட் கார்கோ ஆபீஸ்ல கேட்கசொல்லுது..இது உங்களுக்குத்தான் போகுதா..நீங்க தரும் அட்ரஸ் ஆதார் கார்ட் அட்ரஸ்..
எல்லாம் செக் செய்து தான் பொருளை வெளியே அனுப்புவாங்க.
முன்பொரு காலத்துல அனுப்புனது போல இப்ப எந்த கார்கோவும் போறது இல்லை...

சரி்சரி என்று நான் அனுப்பி வைக்குறேன் என்று விடை பெறுமுன் அப்புறம் மிக முக்கியமான விசயம் பாரசல் வாங்கும் போது எடை மிசின் அவங்க கொண்டு வருவாங்க அதில் எடைய போட்டு பார்த்து பிறகு பார்சல பெற்றதற்கான கையெழுத்து போட சொல்லுங்க உங்க வீட்டில்...உள்ளவர்களிடம்..என்றார்கள் சோமு.ஷாம் இருவரும்.
ஒரு வழியாக இந்த ஏர்போர்ட் கஸ்டமரை
எடுத்தாச்சு...

அண்ணே இப்ப மணி பத்தரை..வாங்க சாப்பிடுவோம் என்று காலை சாப்பாடு சாப்பிட ஆரம்பித்தனர்.

சாப்பிட தொடங்குகையில்..சோமு உடைய
வாட்சப்புக்கு போன் வந்தது...யாரு இந்த நேரத்துல..என்று அவனுடைய போனை எடுத்தான்...எடுத்து பேசிவிட்டு..சாப்பிடுவோம் என்று பார்த்தால் புது நம்பராக இருந்தது..

யாரு...பேசுறா...யாரும் நீங்க...நான்...ஷாம் உடைய அம்மா பேசுறேன் ஷாம் இருக்கானா...இதோ

அண்ணன் இருக்காப்பல..
ஷாம் வாங்கி பேச ஆரம்பித்தான்
என்னம்மா..என்ன விசயம்...தம்பி உன் தங்கச்சி மாப்ள பைக்ல போகையில்
மாடு குறுக்க வந்ததால் அதில் மோதி அடிபட்டு கிடக்குறாருடா...காலில் மட்டும் தான் அடி
நீ எதுவும் பயப்படாதே  ஸ்கேன் போட்டு பார்த்தால் தான்
என்னா எப்படி என்று சொல்ல முடியுமாம்....அவருக்கு இன்னும் இருபது நாளில் பயணம் போகிற நாள் நெறுங்குது..
பணம் தேவைப்படுதுடா..இப்ப அவர வைத்தியம் பார்க்குறதுக்கு .

உன்னிடம் எதுவும் பணம் இருக்குதாடா..இருந்தா அனுப்புறியடா..தம்பி.. 

ஷாம் உடைய தங்கை காதல் கல்யாணம் ..தங்கை கணவர் வீட்டை எதிர்த்துத்தான் இவர்கள் கல்யாணம்...
எல்லாம் சாதிங்கற பேய் பிடித்து திரியும் மனுசப்பேய்ங்களின் காலக்கொடுமை..
ஷாம் சரி சரி நீ பணம் அக்கம் பக்கம் வாங்கி  வைத்தியம் பாரு.
நான் முதலாளி இடம் பேசி அட்வான்ஸ் வாங்கி அனுப்புறேன்.என்றான்..


அதற்கிடையில் சோமு எடுத்த பார்சல்களின் பணம் காசுகளை
சரி பார்த்தான்...அப்போது ..கணக்குல
45 தினார் குறையுதே எப்படி..என்று
பல தடவை கணக்கு பார்த்ததை ஷாம் கவனித்தான்...டேய் என்னடா

பணத்தை யாரிடமாவது வாங்கவில்லையா...எவ்வளவு குறையுது 45 தினார் என்றவுடனே தம்பி பணம் குறைந்தால் நம்ம அக்கௌண்ட்ல ஏறி
சம்பளத்தை முழுசா வாங்க முடியாது...தெரியும்ல....
சரி அந்த ஏர்போர்ட் பார்ட்டியிடம் தான் விட்டிருப்பா..எதுக்கும் அந்த ஏர்போர்ட் பார்ட்டிக்கு போன் போட்டு கேளு...சொல்லு..என்றான் ஷாம்.

உடனே சோமு அந்த கஸ்டமருக்கு போன் அடித்தான்...போன அவன் எடுக்க வில்லை..மறுபடி மறுபடி அடித்தான் எடுத்தான்...எடுத்தது அவனில்லை அவன் கூட வேலை செய்யும்..டீ பாய்..

அண்ணே நான்  இப்ப வந்து கார்கோ் எடுத்தேனல்லவா..ஆமாம் வந்தீங்க..

ஆமாம் நீங்க யாரு பேசுறது நான் டீ பாய் பேசுறேன் ..கொஞ்சமுன்னாடி கார்கோ போட்ட அந்த ஆளு எங்கே அவர் இப்பத்தான் ஏர்போர்ட் போனார்..ஏன் சார் என்ன பிரச்சனை..

இல்லண்ணே...பார்சல் போட்டாக..அதற்கான பணத்தை நாங்க வாங்காமலே வந்துவிட்டோம் அதுதான் போன் பண்ணுனேன்..அவர் நம்பர் இருந்தா கொடுங்கள்...என்றான் சோமு..
உடனே அந்த டீ பாய் நம்பரை அனுப்பி வைத்தார்..

அந்த நம்பருக்கு அடித்தான் சோமு...அடித்த கொஞ்ச நேரத்தில் உடனே அலோ ..என்ற குரல் கஸ்டமருடையது..யாரு...

அண்ணா...நீங்க கார்கோ போட்டீங்க தானே ஆமாம் இப்பத்தான் போட்டேன்..

ஏன் என்ன விசயம்.. நீங்க பார்சல் போட்டதுக்குறிய முன்பணம் 45 தினாரை வாங்காமலே ..வந்துவிட்டோம்.என்றான் சோமு..

உடனே அந்த கஸ்டமர் ஐயையோ நீங்க காசு வாங்குற அவசரத்தில். நானும் ஊர் போகிற அவசரத்தில்..ஆனால் காச நண்பர் கையில் தான் கொடுத்தேன் எதுக்கும் என்  நண்பர தொடர்பு கொள்ளுங்களேன்....

இது என்னடா சோதனை..என்று..உடனே
அவர் நண்பர தொடர்பு கொள்ள ...முயன்ற போது அவருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டது....

ஒரு பக்கம் ஷாம் தங்கை கணவர் பிரச்சனை...
இந்த பக்கம் சோமு பில்லுக்கு காசு வாங்க மறந்த கதை...
இப்படியான நிகழ்வுகளுக்கு நடுவிலே..
கம்பெனிக்கு பதில் சொல்லனும்...
.அந்த நண்பரின் தொடர்பு துண்டிப்பு...

கார்கோ பிக் அப்..ஒவ்வொரு நாளும்
போய் வரும்...வரை இதயத்தில் அதிவேக துடிதுடிப்பு...

வாங்க..நாளைய தொடர தொடரும் வரை
அடுத்த கஸ்டமர ....
தொடர்பு கொள்ள தொடர்வோம்.

வெள்ளி, 28 ஜனவரி, 2022

கார்கோ பிக் அப் (பார்சல்-4)

இதுவரை ...

மூன்றாவதாக பார்சல் ..ஊருக்கு போகிற கஸ்ட்டமர் பார்சல் அனுப்ப 90 தினார் கட்ட பணமில்லாமல் ..பக்கத்து வீட்டு நபரிடம் உதவிக்காக தொடர்பு கொண்டார்..

                      இனி......

அலோ யாரு..நான் தான்  மச்சான்..ஊருக்கு போகுற நேரத்துல கார்கோ போட பணம் குறைவாக இருக்குது உங்கிட்ட நாப்பது தினார் இருக்குதா..டா..
இல்லையடா மச்சான் சம்பளம் இன்னும் போடவில்லையடா...
சரி இது எந்த கார்கோ..டா
அதுதான் மச்சான்
நேத்து நீ குடுத்தியல்ல ஒரு கார்கோ கார்டு..அந்த கம்பெணி தான்..

ஓ...அப்படியா
அப்ப இரு இந்த வாரேன்..

அண்ணே சீக்கிரம் ஒரு முடிவெடுங்க..
எங்களுக்கு அடுத்த ஆர்டரு ரெடியா இருக்கு அப்புறம் அந்த ஆர்டர் மிஸ் ஆகிவிட்டா..நாங்கதான் பதில் சொல்லனும் என்றான்...ஷாம்.

இருங்க பாய்..இதோ என் நண்பன் வந்துட்டான்..
அலோ வணக்கம் ..என்று அறிமுகமானார் அந்த நண்பர் ..

சொல்லுங்க எவ்வளவு குறையுது.
90 தினார் மொத்தம் இவர் ஐம்பது தினார் தான் இருக்குது என்றார்..

பாக்கி 40 தினார் இல்லையென்கிறார்
அதுதான் உங்களிடம் உதவிக்கு அழைத்தார்..என்றான் ஷாம் உடனே அந்த நண்பர் தன் நண்பரை பார்த்து..

உனக்கு என்னா எல்லாம் அனுப்பனுமாடா....
பாதி ஏர் கார்கோ. பாதி ஸீ கார்கோ அனுப்பு மீதமுள்ளதை ..ஸீ  பார்சலுக்கு மட்டும் முன்பணம் கட்டி விடு..பாக்கி பணம்
நான் சம்பளம் வாங்கி கொடுக்கிறேன் என்றான் நண்பன்.

இல்லை எல்லா பார்சலும் ஒரே நேரத்தில் வரவேண்டும்..அது எல்லாம் முக்கியமான பொருள்கள் மச்சான்.
எனக்கு எல்லாமே ஏர் கார்கோ அனுப்ப மட்டும் எப்படியாவது உதவி செய்..நண்பா.

உடனே நண்பர்..வந்து ஷாம் இடம் 

சார் நான் உங்க கார்கோவில் தான் பார்சல் எல்லாம் அனுப்பிகிட்டு இருக்கிறேன்...இதை நீங்க எல்லாமே ஏர் கார்கோவிலே போடுங்களேன்

ஆனால் பணம் பேலன்ஸ் போட்டு எடுங்க நான் மீத பணம் மாலியா ஆபீஸ்ல வந்து கட்றேன்..என்றார்.

சார்.நீங்க சொல்றதில் நம்பிக்கை இருக்கு ஆனால் ஏர் கார்கோ பார்சலுக்கு பேலன்ஸ் போட்டு விட்டால் நீங்க மீதமுள்ளு காசு கட்டும் வரை சென்னை ஆபீசில் தான் இருக்கும்..

பேலன்ஸ் பணம் கட்டும் வரை பார்சல் வெளியாகாது.  என்றான் சோமு
சரி நீங்க எந்த ஆபீஸ்கு போன் அடிச்சி ஆர்டர் கொடுத்தீங்க...இதோ இந்த நம்பர் தான்..
ஷாம். வாங்கி பார்த்தான்..ஓ..இதுவா..

இது ஜஹ்ரா ஆபீஸ் நம்பரு..
சரி இருங்க...

ஷாம் ஜஹ்ரா நம்பருக்கு தொடர்பு கொண்டான்..அலோ சாரே..ஒரு ஏர்போர்ட்
ஆர்டர் கொடுத்தீங்களா...என்றான்
இல்லையே என்றான்..
கஸ்ட்டமர் உங்க நம்பர்ல தான் பேசுனதாக சொல்லுது..உடனே போன கஸ்ட்டமர் இடம்
கொடு என்று ஆபீஸ் நபர் சொல்லவும்...

கஸ்ட்டமர் வாங்கி பேசினார்..ஆமாம்
நீங்க எந்த ஆபீஸ்க்கு போன் போட்டீங்க..
உங்க கிட்டத்தான் பேசினேன்..
எப்ப..? 
நேற்று..என்றார் கஸ்ட்டமர்..
நேற்றா..
உடனே ஆபீஸ் ஆர்டர் புக்க எடுத்து
நேற்றைய ஆர்டரை செக் பண்ணும் போது..அந்த கஸ்டமர் நம்பர் இருந்தது..
ஆமாம்...நேற்று தான் உங்களுக்கு டிரைவர் போன் பண்ணுணாங்க நீங்க ஏன்...எடுக்கவில்லை..இல்லை நேற்று
அரபி வெளியே கூட்டிட்டு போய்டான்..
அதுதான் நேற்று நான் எடுக்க வில்லை..
என்றார் கஸ்ட்டமர்...அப்ப ஏன்  இன்று இந்த ஆபீஸ்க்கு போன் அடிக்க வில்லை.என்றான்  கனீர் குரலுடன் ஆபீஸ் இடமிருந்து...நான் அடிக்கும் முன்பே உங்க ஆட்கள் எனக்கு அடிச்சுட்டாங்க..சரி சரி..இப்ப என்ன
பார்சல் போட்டாச்சா...இன்னும் இல்லைங்க..பணம் குறைவா இருக்குது.. ஏர் கார்கோ அனுப்பனும் ஸீ கார்கோ அனுப்ப மனமில்லை ..எல்லாம்
ட்ரை ஃபுட் காஸ்மெட்டிக்ஸ்..நடக்க விருக்கும் வீட்டுவிசேசத்துக்குறிய பொருள் என்றார் கஸ்ட்டமர்...மொத்தம் எவ்வளவு 90 தினார் 50 தினார் தான் கையிலிருக்கு..வேறு 1-2 தினார் தான் சில்ற இருக்குது..மீதம் 40 தினார் என் நண்பர் வந்து கட்டுவேன் என்றார்
உங்க நண்பர் எப்ப.. கட்டுவார்...இன்னும் பத்து நாளில் கட்டிவிடுவார்...என்ற கஸ்ட்டமர் பதில்..
உடனே..அலோ ஏர் கார்கோ 25 நாள் டெலிவெரி டைம்..

( இடையில் கஸ்ட்டமர் நண்பரிடம் குறுக்கிட்டு என்ன மச்சான் 25 நாள் சொல்றாங்க...என்றான்
அதற்கு நணபர் அப்படித்தாண்டா சொல்வாங்க எனக்கும் அதுதான் சொன்னாங்க ஆனால் 15 நாளில் கிடைத்துவிட்டது..அதனால் நீ கவலைப்படாத நான் பேலன்ஸ் கட்டிவிடுகிறேன் என்றான். )

..ஆனால் நாங்க உங்க பார்சல் பணம் கட்டுனாதான் இங்கிருந்தே போகும் அப்படியே போனாலும்...அங்க அதாவது சென்னை குடோன்ல தான் கிடக்கும்..
பணம் தாமதமானால்..உங்க பார்சல் 
டெலிவெரி ஆக தாமதமாகும்...
சீக்கரம் பணம் கட்ட சொல்லுங்க உங்க நண்பரிடம்.. என்ற உடனே அப்படியே
டிரைவர்ட்ட போன கொடுங்க...ஷாம்.
சொல்லுங்கண்ணே...MNP (MONY NOT PAIT) என்று பாரசல் மேலயும் பில்லில் எ எழுதி C/O என் பெயர் போடு..
ஒரிஜினல் பில்ல.. கொடுக்காதே..கம்பெணி என்வெலப்ல சும்மா எழுதி கொடு..எவ்வளவு வாங்கியதும்..மீதம் எவ்வளவு என்றும்.
பார்சல் மொத்த வைட்டு.பார்சல் ஐட்டம்
இன்றைய தேதி இப்படி போட்டு
உன் நம்பர்..என் நம்பர் இவைகளை எழுதி கொடுத்து பார்சல எடுத்துட்டு வா..நான் மேனேஜர் அல்லது அக்கௌண்டர் இடம் பேசிக்கொள்கிறேன்..மறந்திடாதே
கஸ்ட்டமர் நம்பர்..கஸ்ட்டமர் உடைய நண்பர் நம்பர் இவைகளை எழுதி வாங்கிக்கோ..ஒரிஜினல் பில் பக்கம்
கஸ்ட்டமர் ஏரியா அட்ரஸ் இவைகளை எழுத மறந்திடாதே..போன் எடுக்காட்டி கூட..நேரில் போய் அவருடைய நண்பரை சந்திச்சு பேலன்ஸ வாங்கிக்கலாம். என்று ஜஹ்ரா ஆபீஸ்..இடம்...இருந்து கிரீன் சிக்னல்.
கஸ்டமர் சந்தோசத்துடன்...அப்படி.என்று
கொஞ்சம் தயக்கத்துடன்...டிரைவரிடம்
பணம் பேலன்ஸ் என்பதால பார்சல அனுப்பாம இருக்காதீங்க..பா..அதில் தான் முக்கியமான பொருள் எல்லாம் இருக்கு,..என்றார்..
அண்ணன் உங்க நண்பர பணம் கட்ட சொல்லி நீங்க தான் பாஃலோ பண்ணனும் அவர் பணம் கட்டி விட்டால்..
உங்க பார்சல் பணம் கட்டுன ஓரிரு நாட்களில் டெலிவெரி ஆகிவிடும்..
உங்க பார்சல இங்க வைத்தால் எங்களுக்குத்தான் சிரமம்..சரி 
சோமு பில்ல போடு நான் பார்சல நம்பர் போட்டு லோடு ஏத்துறேன் வண்டியில்..என்று..தயாரானார்கள்..
அப்புறம்...சோமு...கஸ்ட்டமர்..கையில் பணமில்ல ஆதலால் கொஞ்சம் இன்ச்சூரன்ஸ் பேக்கிங் இவைகளை கொஞ்சம் கம்மி போட்டு ..ஒரு 85 தினார்
வருகிற மாதிரி போடு..என்றான் டிரைவர்..45  பெய்டு ..40 தினார் பேலன்ஸ் என்று கவர்ல எழுதி கொடு..
ஒரிஜினல் பில்ல கொடுக்காதே அதில். 
C/O ஜஹ்ரா ஆபீஸ் ஸ்டாப்ஃ பெயர எழுது என்றான்.
அந்த கஸ்ட்டமர் அவர் நணபர் அப்போது தனிமையில் போசிக் கொண்டிருந்தார்கள்...அப்படி என்ன பேசினார்கள்..அதை நாளை பார்ப்போம்..
தொடர்வோம்........

வியாழன், 27 ஜனவரி, 2022

கார்கோ பிக் அப் / பார்சல் -3

நேற்று....

தொடர்ந்து மூன்று பிக் அப் ..அதில்

இரண்டு எடுத்தாச்சு..மூன்றாவது கஸ்ட்டமர் இடம் பேசுவதற்கு முன்பு...இரண்டாம் கஸ்ட்டமர் அவருடைய முந்தைய பார்சல் தாமதமாக டெலிவெரி ஆனதற்கான விளக்கம் பரிமாறப்பட்டன.தன் கம்பெணி எப்படி செயல்படுது முதலாளி எப்படி செயல்படுகிறார்..என்று சோமு சொல்லிக்காட்டினான்..

இனி இன்று.............
                            அலோ ..
கார்கோவிலேர்ந்து பேசுறோம்
பார்சல் ரெடியா இருக்குதா...
                                             எல்லாம் ரெடியா 
இருக்குது...எவ்வளவு  நேரமாகும்..
இது கஸ்ட்டமர்...இதோ இன்னும்
 பத்து நிமிசத்துல வந்து விடுகிறோம்...சோமு சொன்னதும்..

கஸ்ட்டமர் சரிங்க நீங்க சீக்கிரம் வந்து விட்டால்  பார்சல் வைட் சம்திங் தெரிந்து விடும்..அப்பறம்..ஏர்போர்ட்ல போய் வைட் கூடுதலானால் அதுக்கு டூட்டி கட்ட சொல்லுவான்..ஒரு கிலோவுக்கு..அவன் வைக்குறதுதான் ரேட்டு...ஐந்து தினாரும் ஆகலாம் ஆறு தினாரும் ஆகலாம்...என புலம்பினார் கஸ்ட்டமர்.
அண்ணே இந்த ஆர்டரும்...பேக்கிங் தான்..இன்று யார் முகத்துல விடிஞ்சதோ..நம்ம பொழப்பு...சோமு

ஷாம் இடம் புலம்ப ஆரம்பித்தான்..இங்க பாரு சோமு இந்த பொழப்பே இப்படித்தான்..இப்படி வந்தாதான் நாம அதிகமான பார்சல் எடுக்க முடியும் ..செஞ்சுரி போட முடியும்.
 எந்த உழைப்பும் நோகாம திங்குற நொங்கு போல அல்ல...நடுக்கடலில படகுல போய் வலையை வீசி...மீன் பிடிக்கிற காரியம்.
சரியா..இன்று நீ இந்த இரண்டு மூன்று ஆர்டருக்கே அலுத்துக்கிறியே...இப்படி
அலுத்து வெறுத்து போயிருந்தா..நாம
இந்த கம்பெணியில வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது..காரணம் இந்த கம்பெணியை உருவாக்கிய முதலாளி உடைய அயராத உழைப்பை எண்ணிப்பாரு சோமு...என்றான் ஷாம்..
ஆமான்னே ்.அப்ப நம்ம முதலாளி படிச்சு சம்பாரித்து இந்த கம்பெணியை உருவாக்க வில்லையா...!..சோமு ஆச்சர்யத்துடன் கேட்டான் .படிச்சவங்க ஆரம்பித்திருந்தால் இந்த கம்பெணி எப்பவோ இழுத்து மூட பட்டிருக்கும்..இது
ஒரு பொன் முட்டை இடுற வாத்து  மாதிரி..நாம 
நம்ம திறமையை உடல் வலிமையை
செலவு செய்ய செலவு செய்ய..தினம்

அதற்கான பலன் கிடைக்கும்..அதனால் தான்..முதலாளி நாம எடுக்கும் ஒவ்வொரு பில்லுக்கும் போனஸ்..மற்றும் கிலோ அதிகாமானால் செஞ்சுரி போனஸ் என்று நமக்கு கொடுத்து நம்மையும்...சந்தோசப்படுத்துறாப்ள.!

அந்த போனஸ் என்கிற ஒன்று இல்லை என்றால் நமக்கு ஆர்டர் எடுக்குற ஆர்வம் குறைந்திருக்குமா இல்லையா..?


ஆமான்னே...நேத்துக்கூட பக்கத்துல இருக்கும் கார்கோ கம்பெணியில் வேலை பார்க்கும். டேவிட் சொன்னான்

உங்க கம்பெணியில் நிறைய சலுகை இருக்குது...என்றும்...மாதம் இடையில் மீட்டிங் நடத்தி அதில் தொழிலாளர்களையும் கௌரவபடுத்தும் உங்க முதலாளி கிரேட் என்றான்..அப்படி என்ன அண்ணன் நம்ம முதலாளி நமக்கு செய்வாங்க.!அதை இன்னொரு நாளைக்கு சொல்றேன்..முதலில் ஏர்போர்ட் கஸ்ட்டமருக்கு போன் அடித்து அட்ரஸ வாங்கு .அப்புறம் அவன் போகிற அவசரத்துல வேறு கார்கோ கம்பெணிக்கு போன் போட்டு நம்ம ஆர்டரு கேன்சலாகிட போகுது..
அண்ணன் ஆமாம் காலை சாப்பாடு சாப்பிட்டோமா..
இன்னும் இல்ல என்றான் ஷாம்
இதோ..இதை எடுத்து விட்டு..சாப்பிடுவோம் அப்போது நேரம் 
உனக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம்..என்று
பசியோடு சோமு-ஷாம்  ஏர்போர்ட் கஸ்ட்டமரிடம் சென்றார்கள்..வாங்க ..
முதலில் நான் சொல்றதை கேளுங்க..
இதுதான் நான் அனுப்பவேண்டிய பார்சல் எல்லாம் ரெடியா இருக்குது
பேக் பண்ணாம அப்படியே இருக்குது..
இது நான் ஏர்போர்ட் எடுத்து போகிற லக்கேஜ் ..இந்த ரெண்டு லக்கேஜ்..40 கிலோ இருக்கனும் என் கை லக்கேஜ் ஏழு கிலோ இருக்கனும் எல்லாம் ..எனக் கென்னவோ வைட்டு அதிகம் இருப்பதாக தெரியுது...நாம சாமான் வாங்கித் தருகிறேன் கொண்டு போறியா என்று கேட்டு விடுவோமோ என்று அவனவன் சொல்லாமலே ஊர் கிளம்பிடுவானுங்க...நாம போறது மட்டும் எப்படித்தான் தெரியுதோ...எல்லாம் வேண்டப்பட்ட ஆட்கள்...அதனால் எதையும் திருப்பி கொடுக்க மனமில்லாமல் புலம்பினான்..
சோமு..விடம்,

ஏன் பாய் கவலைப்படுற மீதம் உள்ளதை கார்கோ வோடு போடுங்க..

உங்க லக்கேஜ மட்டும் எடுத்துட்டு போங்க மத்தவங்க லக்கேஜ கார்கோவில் போடுங்க...என்றான்..

இல்ல இல்ல எதுவானாலும்...என் லக்கேஜ போடலாம்...ஆனால் பணம் குறைவான இருக்குது...இதோ நான் அனுப்ப வேண்டிய கார்கோ பார்சல வைட் போட்டு அதுக்கு மட்டும் கொட்டேசன் கொடுங்கள்...
சோமு வைட்டு போட்டு பார்த்தான்..

பிறகு மீதமுள்ள லக்கேஜ சேர்த்து வைத்து அதை வைத்து ஒரு டோட்டல் கணக்கை போட்டு பார்த்தான்..பாய்..

நீங்க அனுப்ப வேண்டிய கார்கோ ரெண்டுக்கும்...அறுபது தினார் வருது..

இதோடு இணைத்து மீதமுள்ள லக்கேஜ கூட்டி போட்டு பார்த்தால் கூடுதலாக முப்பது தினார் வருது.ஆக மொத்தம்
90 தினார் வருது பாய்.இப்ப உங்களிடம்
எவ்வளவு பணமிருக்கு..எங்கிட்ட ஐம்பது தினார்தான் இருக்குது..மேலும் நாற்பது தினாருக்கு எங்கே போவேன்..
ஊருக்கு போற டென்சன் பார்சல் அதிகம் இப்படி அந்த கஸ்ட்டமர்..ரொம்ப நொந்து போய் இருந்தார்...ஷாம் வந்து ஒரு ஐடியா சொன்னார்..ஆமா பாய் நீங்க எத்தனை நாள் லீவுல போறீங்க ..

ஒரு மாசம் தான் போறேன்..என்றார் கஸ்ட்டமர் அப்ப இதுல உள்ள பார்சலில் முக்கியமானத மட்டும் எடுங்க என்றான் ஷாம்..ஏன் சார் என்றார்..இல்லை..மீதமுள்ள பார்சல
ஸீ கார்கோவில் போடுங்க..கொஞ்சம் முன் பணம் கொடுங்க ஏர் பார்சலுக்கு மட்டும் முழு தொகையும் கட்டுங்க...என்றான்..எல்லாமே முக்கியமான சாமான்தாங்க...சரி கொஞ்சம் பொறுங்க என் நண்பனிடம் போன் செய்து   கேட்குறேன் என்று..பக்கத்து வீட்டு நண்பனிடம் தொடர்பு கொண்டான்...
அந்த நண்பர் போன் எடுத்தாரா..எடுத்து பேசி உதவினாரா...நாளை பார்ப்போம்.


தொடரும்......

கார்கோ பிக் அப் ( பார்சல்-2)

இதுவரை....
முதல் ஆர்டரை வாங்கி ஷாம் சோமு
கிளம்பினார்கள்...போன இடத்தில்.
பார்சல் ரெடியாக இல்லை..பிறகு பார்சலை பேக்கிங் செய்து எடுத்தார்கள்.
பார்சல் போட்ட சந்தோசத்தில் அந்த அம்மா இந்தாங்கப்பா பிடிங்க.
குவைத் பணம் இரண்டு தினார் வைத்தது...ஆமாம் அது டிப்ஸ் தான்.

டிப்ஸ் கிடைத்த சந்தோசத்தில் மறு ஆர்டர் இருக்கும்  ஆபீஸ்க்கு கால் பண்ணான்...சோமு...


இனி......

அலோ....அண்ணன் அந்த ஏரியா எடுத்தாச்சு...வேறு எதுவும் இருக்கா அண்ணே....என்றான் சோமு..கொஞ்ச அவசரமா...சீக்கிரம் என்றே...

ஏன்..உங்களுக்கு எதுவும் வேற வேலை எதுவும் இருக்குதா....ஆர்டர்
பாய்...சும்மா...தமாசாக...கேட்கவும்

சோமு...இல்லை இல்லை..
வேறென்ன ஆர்டரு இருக்கு சொல்லுங்கண்ணே என்றேன்..
சரி சரி
இந்தா...இந்த நம்பர எழுதிக்கோ..

கஸ்ட்டமர்..கொஞ்சம் ஓவரா பேசுவாப்ள..நீயும் ஓவரா பேசாம..கொஞ்சம் கூலா பேசி எடு..சரியா..?
சரி ண்ணே....

என்னா சொல்றாப்ள...என்னாவாம்...
ஷாம்..டிரைவர் கேட்டான்..அதெல்லாம் ஒன்னுமில்லை...இந்த கஸ்ட்டமர் கொஞ்சம் கரார் பார்ட்டியாம் பார்த்து கவணித்து எடுங்கண்ணு சொல்றாப்ள..

ஷாம்..ஐயையோ ...
ஏன் என்னாச்சுன்னே...
இல்லடா..வருகிற அவசரத்தில ஏன் நெட் போன ரூம்லையே வச்சிட்டு வந்துட்டேன்...இனி நைட்டு தான் ரூமுக்கு போவேன்...வீட்லேந்து போன் வரும்...

இடையில் சோமு...இல்லையே
வீட்லேந்து போன் வரும் என்கிற கவலைமாதிரி தெரியலையே...உங்க கைக்கு அது இல்லாத கவலை தானே..

ஆமாடா...அதுவும் தான்..நம்ம பொழுது போக்கே போன் தான் என்றாகிப் போச்சி

அது கையிலிருந்தா..நமக்கு தெரிந்த கழுதை....அந்த கவிதையை எழுதி போட்டமா...என்று ஒரு மனம் சந்தோசப்படும்..சரி சரி..இன்று நம்ம பேஸ்புக் ஓப்பனில்லை...

சரி்சரி பேச்சைக்குறை அடுத்த கஸ்ட்டமர் யாரென்று போன்பண்ணு சீக்கிரம் ..
சோமு..சரிண்ணே...
அலோ...நாங்க கார்கோவிலேந்து பேசுறோம்...இந்த தடவை கொஞ்சம் உசாரா ..பார்சல் பேக்கிங் செய்து இருக்குதா என்றான்..சோமு..

இல்லைங்க அதுதான் உங்க ஆபிஸ்ல சொன்னேன் அட்டைப்பெட்டி எடுத்துட்டு வர சொன்னேனே..கஸ்ட்டமர் இடம்
இதை எதிர் பாக்கல..சோமு..
சரிசரி முதலில் என்ன வருதோ அதேதான் கடைசி வரை பார்சல் பேக்கிங் செய்து எடுக்கனும்..என்றே முனங்கியே போனான்...சோமு.
கடுப்போடு் போன சோமு வின் போன்
அடிக்கும் சப்தம்..அலோ.. என்ன எடுத்தாச்சா...ஆர்டர் பாய் குரல்..
எடுத்தாச்சாவா..பேக்கிங் ரெடியில்லை..
சரி இந்தா இந்த ஆர்டரையும் எழுது..
இந்த கஸ்ட்டமர் இன்று ஊருக்கு போவுதாம்...அதை முடித்து இதையும் பேக்கிங் செய்து எடுக்கனும்...பார்ட்டி நல்ல ஆளு..சாய் பாணிக்கு தருவாப்ள..
சரியா..
சோமு..அப்படியே கூல் ஆனான்..
சரிண்ணே...
இந்த இதை பேக் பண்ண ஆரம்பித்தான்..சோமு..இடையில் கஸ்ட்டமர்...ஏன் பாய் கடைசியா உங்க கார்கோவில் பார்சல் போட்டேன்..
ரொம்ப லேட்டாகிடுச்சு..நான் ஏர் கார்கோ தான் போட்டேன்..ஆனால் அது
ஸீ கார்கோ மாதிரி 100 நாள் கடந்து போயிடுச்சு...இதையும் அதே மாதிரி 
லேட் பண்ணாதீங்க...
இல்லண்ணே அது ஏர்போர்ட்ல நடக்குற அட்டூழியங்க...அது எப்படியும் வருசத்துல இதே மாதிரி தொந்தரவு கொடுக்க தவறமாட்டாங்க...என்ன செய்ய எல்லாம் பணம் கொடுத்து தான்
வெளியாக்கனும் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக...அப்படி பணம் கட்டி எடுக்க போய்..உங்க பார்சல் 100 நாளில் வெளியே எடுக்க முடிந்தது..இன்னும் பல கார்கோ கம்பெணிங்க பணம் கட்டாமல் அப்படியே கிடப்பில் போட்டவங்களும் இதை குவைத்தில பிஸ்னஸ் செய்துகிட்டு இருக்காங்க...
         எங்க கம்பெணி 
பிஸ்னஸா மட்டும்பார்க்கல..
சேவையாகவும் பார்க்கும்..உங்களை போன்ற கஸ்ட்டமர்களுக்கு தேவைக்காகவும் செயல் படுகிறது...இதெல்லாம் நேத்து வந்த கார்கோ காரங்களுக்கு தெரியாது
அடிமட்டத்திலிருந்து வரும் ஒவ்வொரு முதலாளிங்களுங்கும் தெரியும்.அந்த வலியை உணர்ந்தே ..கஸ்ட்டமர் மனமும் மகிழனும்..நாமும் மகிழனும் என்று 
உழைப்பவர்.எங்க முதலாளி.
என்றே கஸ்ட்டமர தெளிவு படுத்தி ஒரு வழியாக பார்சலை எடுத்தான்..சோமு 
என்னடா இவன் முதலாளியை பற்றி இப்படி சொல்றானே என்று எண்ணவேண்டாம்...உண்மை தாங்க..

அதைப்பற்றி..நாளை சொல்றேன்..

பிக் அப்..தொடரும்...
தொடரும்....

புதன், 26 ஜனவரி, 2022

கார்கோ பிக் அப்

பார்சல்-1

எப்பவும் போல் பொழுது விடிந்தது...அலறி ஓய்ந்து அடங்கியே கிடந்தது..அலாரம்,
ஊ..சொல்றியா மாமா  ஊ.ஊ சொல்றியா மாமா...மொபைல் ரிங்டோன் தான்...எடுத்து பேசுனான்...சீக்கிரமா வாங்கப்பா...
கொஞ்சம் கடுமையான அழைப்பு.இதோ இதோ..என்றபடி கிளம்பினான் ஷாம்..
ஆமாம் அவன் ஒரு கார்கோ கம்பெணியில்
பார்சல் எடுக்கும் டிரைவர்..கூட உதவிக்கு
சோமு..என்ற சிறுவன்.இருவரும் ஆயத்தமானார்கள் ..
சோமு..பார்சல் எல்லாம் இறக்கிட்டாங்க..
வைட் மிசின்...அரபானம்(லோடு இழுக்கும் வண்டி..அதில் டயர்ல காத்து இருக்குதா வென செக் பண்ணு. ..அப்புறம் ஏர்.பார்சல் பில் ஸீ பார்சல் பில் எல்லாம் செக்பண்ணு. முடியுரமாதிரி இருந்தா புதுபில் எடுத்துக்க.
மார்க்கர்..டேப்ரோல்..கார்ட்டூன்..முக்கியமா அந்த கால்குலேட்டர்... எந்த ஏரியா ..தரப்போறானோ..வாங்கிட்டுவா..
நான் காலை சாப்பாடு ..டீ வாங்கி வைக்குறேன்..இறைவா..நீதான் காப்பாத்தனும்...இன்னைக்கு ஆர்டர் அதிகம் வரணும்..செஞ்சுரி போடனும்..
என்னா செஞ்சுரி என்று கேட்கிறீர்களா...
ஆமாம் ஸீ பார்சல் ஏர் பார்சல் எல்லாம் சேர்த்து ஆயிரத்து ஐநூறுக்கு மேல் கிலோ இருந்தா..ஊர் காசுக்கு இரண்டாயிரூபா போனஸ் இரு நபருக்கு கிடைக்கும்.

முதல் கஸ்ட்டமர் அலோ கார்கோவிலிருந்து பேசுறோம்...எங்க வரணும் அட்ரஸ் சொல்லுங்க...

கஸ்ட்டமர். .:-வந்துட்டீங்களா...
சோமு:-வந்துகிட்டு இருக்கிறோம்
நீங்க அட்ரஸ் சொல்லுங்க...

கஸ்டமர்..ம்..எழுதிகிங்கோ
எவ்வளவு நேரத்துல வருவீங்க..
கொஞ்சம் சீக்கிரம் வாங்கப்பா..
சோமு:-சரிமா..பார்சல் ரெடியா.
.
ரெடியா இருக்குப்பா...நீங்க சீக்கிரம் வாங்கப்பா...

சோமு..ட்ரைவர பார்த்து சொன்னான்
அண்ணே ரெடியா இருக்குதாம் போங்கண்ணே..

சொன்ன அட்ரஸ்க்கு போயாச்சு.

சோமு ..போய் வீட்டு பெல் அடித்ததும்
கஸ்ட்டமர் வந்ததும்...முதல் கேள்வி
தம்பி அரபி தூங்குறான்  சத்தம் போடாம 
வாங்க..

சோமு போய் பார்சல பார்த்தான் 
எல்லாம் அப்படி அப்படியே கடந்தது..
என்னமா பார்சல் ரெடியா இருக்குதுண்ணு சொண்ணீங்க...

ஆமாப்பா உங்க ஆபீஸ்ல சொன்னாங்க 
எங்க ஆளுங்க வந்து பேக்கிங் செய்வாங்க
என்று..
என்றதும்...சோமு முகம் மாரியது..

முதல் கஸ்ட்டமர் சரி என்று...வண்டிக்கிட்ட வந்தான் ..
அண்ணே ஆர்டர் எந்த ஆபீஸ் என்று கேளுங்க...என்றான்.
ஏண்டா...இல்ல பார்சல் பேக்கிங்காம்..

ஆமாம் ..ஆர்டர் எடுக்குறது அவங்க வேலை
பார்சல எடுக்குறது நம்ம வேலை...அதுக்குத்தான்  நமக்கு ஒரு பில்லுக்கு இருநூறுபில்ஸ்( இருநூறுகாசு )
போ...போ..இது நான் சொல்லல...

மத்த டிரைவருக்கு..சொன்னத நான் கேட்டது...

பரவாயில்லை எடு...அதுக்காக ஏன் கவலைப்படுற நானும் கூட  நிக்குறேன்.
வைட் போட்டு பில்லு எல்லாம் போட்டு..

காச கொடுத்தது...
தம்பி இப்பத்தான் முதல் பார்சல் எடுக்க வந்திருக்கீங்க...
இந்தாங்க..இதை நீங்க ரெண்டு பேரும் எடுத்துக்குங்க...(டிப்ஸ்-2கேடி)
சரி ஆபிசுக்கு அடித்து ஓக்கே பண்ண சொல்லு கொடுத்த ஆர்டர.
அடுத்த ஆர்டர கேளு..கேட்டாதான் கிடைக்கும்...அப்புறம் நாம செஞ்சுரி போட முடியாது...

அடுத்த ஆர்டர் கிடைத்ததா நாளை பார்ப்போம்...

தொடரும்.....

ரமலான் கரீம்

https://youtu.be/Z8O9SYbC-Bg

அது ஒரு அழகிய கல்லூரிக்காலம்


கோடாரி தைலம் கேட்கும்....
கொலக்கட்டை சாரும் ஞாபகம்,
கலகலப்பாய் சிரிக்க வைக்கும்
பிச்சகனி சாரும் ஞாபகம்.

கோரமாய் பார்க்கும்
ஓரக்கண்ணு சாரும் ஞாபகம்,
தோள்கொடுத்து பழகும்
தொப்பி சாரும் ஞாபகம்.
தினற வைக்க பாடமெடுக்கும்
திக்குவாய் சாரும் ஞாபகம்.

தொடுவானமாய் தோன்றும்
நெடுங்கொக்கு சாரும் ஞாபகம்.
நாகரீகமாய் வளம் வரும்...
பேண்டு  சாரும் ஞாபகம்.

அவ்வபோது அதட்டும்
ஆயமாக்கள் ஞாபகம்,
அரவணைத்து நடத்தும்
செந்தமிழ் செல்வி  டீச்சர் ஞாபகம்.

வெகுளியாய் பேசும்
கலாவதி டீச்சர் ஞாபகம்,
உரிமையோடு உறவாடும்
பிரபு அம்மா டீச்சர் ஞாபகம்.

பட்டுக்கோட்டையிலிருந்து வரும்
நூரஜஹான் டீச்சர் ஞாபகம்.
ஒரத்தநாட்லேந்து வரும்...
சகர்பான் டீச்சர் ஞாபகம்.

பேட்டையிலிருந்து வரும்
ராஜேஸ்வரி டீச்சர் ஞாபகம்,
கல்லூரி வாழ்வு தந்த
சங்கத்து பள்ளி ஞாபகம்.

என் பிள்ளைகளும் அங்கே
படிப்பதில் சந்தோச ஞாபகம்.
நட்புகளாய் கிடைத்த
 வகுப்பறைகள் ஞாபகம்.

கல்வெட்டாய் போன 
கிறுக்கிய...அவளுடைய 
பெயர் ஞாபகம்.
பருவங்கள் கடந்தும்
மாறாத ஞாபகம்.

பரம்பரை பரம்பரையாய்
பார்த்து ரசிக்க முடிந்த ஞாபகம்.
மாணவனாய் சென்ற பள்ளிக்கு
கவிஞனாய் செல்வதே ...பேரானந்தம்.

என் பள்ளிக்கு 
நான் கொடுக்கும்.ஞாபகம்
மாற்றம் காண முடியாத இடம்
தோற்றாளும் வெற்றியடைய..

போராட வைக்கும் நாம்
படித்த பள்ளிக்கூடம்..

இவன்.
"சூரியக் கவிதீபம்"
-மு.யாகூப் அலி